Saturday, June 1, 2019

காவல்நிலையம் முன் டிக்டாக் செயலில் வீடியோ எடுத்த வாலிபர் கைது.

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையம் முன் டிக்டாக் செயலில் வீடியோ எடுத்த வாலிபர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(21). திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரியும் இவர்  விடுமுறைக்காக சில தினங்களுக்கு முன்  ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தங்கேஸ்வரனுக்கு ஓட்டுநர் உரிமம் சரிபார்ப்பிற்காக கண்டமனூர் காவல்நிலையம் சென்றுள்ளார்.  டிக்டாக் மோகத்தால் காவல்நிலையம் முன்பாகவே வீடியோ எடுத்த பாண்டி, அதனை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியதையடுத்து இன்று சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர் பரமேஸ்வரன் நண்பரான தங்கேஸ்வரன் என்பவரையும் தேடி வருகின்றனர். டிக்டாக் மோகத்தால் காவல் நிலையம் முன்பாக வீடியோ எடுத்த வாலிபர் கைது  செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் மோகத்தால் பெண்கள், வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment