தேனி மாவட்டம் தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய மாநில அரசு இணைந்து நடத்திய 60 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள தகவலின்படி தேனி மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முதியவர்களுக்கு மாநில மத்திய அரசு முகாம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதால் இதில் முதியோர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் இந்த முகாமில் கலந்து கொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சக்கர நாற்காலி ஊன்றுகோல் மடக்கு பாகர்கள் காதொலி கருவி ஊன்றுகோல் பல்செட் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள் மருத்துவ பரிசோதனை செய்து வழங்கப்படுகிறது இந்த முகாமில் கலந்து கொள்ளும் பயனாளிகள் வறுமைக்கோடு சான்று முதியோர் உதவித்தொகை சான்று ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
No comments:
Post a Comment