Monday, June 10, 2019

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு உருவாக்கப்பட்டுள்ளது

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள&தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிதீவிர வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 படுக்கைகளுடன் கூடிய பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துமவனை டீன் ராஜேந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இங்கு சிறப்பு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 20 முதல் 25 பேரை தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும் இந்த வார்டில் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிபா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.  இதுவரை தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி யாரும் அனுமதிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் யாரும் வந்தால் அவர்களை உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். நிபா வைரஸ் சிகிச்சை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்

No comments:

Post a Comment