Friday, June 21, 2019

மூலைக்கரைபட்டியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவிகளுக்கு 1 லட்சம் மதிப்புள்ளசீருடை வழங்கும் நிகழ்ச்சி.



எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு  கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட வழக்கும் நிகழ்ச்சி நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரி தொகுதி  மூலைக்கரைப்பட்டி நகரம் சார்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் தலைமை தாங்கினார்.
மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவில் நகர பொருளாளர் பாருக் அவர்களும் ,புது தெருவில்  நகர செயளாலர் சேக். பேருந்து நிறுத்தம் அருகே நகர துணை தலைவர் முஹம்மது அலி ஆகியோர் கட்சி கொடி ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு   160 பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி,  மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது,
நான்குநேரி தொகுதி தலைவர் இம்ரான் அலி,
பாப்புலர் ப்ரண்ட் நாங்குநேரி டிவிசன் தலைவர் ஷாம் சாகப்தீன் ,
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் ,
மூலைக்கரைபட்டி காவல் உதவி ஆய்வாளர் துரை ,
அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம்,
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமார் , ஜமாத் நிர்வாகி சேக் அப்துல் காதர்,
விமன்ஸ் இந்திய மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா,
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மூலைக்கரைப்பட்டி நகர தலைவர் நிஜாம் உள்ளிடோர் உட்பட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவுகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கட்சியின் நகர இணை செயலாளர் பீர்மைதீன்  நன்றியுரை கூறினார்











No comments:

Post a Comment