கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய்க்கு மாத்திரை உட்கொள்ளும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமைவகித்து பேசியதாவது
காசநோயாளிகள் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி எடுத்துக்கூறினார்
காசநோயாளிகளின் வீட்டில் உள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனை கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்றுகூறினார்.
காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பற்றி பேசினார்
கூட்டத்தின் முடிவில் கோவில்பட்டி ரோட்டரி கிளப் மூலம் நோயாளிகளுக்கு இலவச சத்துணவு வழங்கபட்டது
இந்நிகழ்ச்சியில் காசநோயாளிகள் மற்றும் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் , சுகாதார பார்வையாளர் தெய்வராணி, ஆய்வகநுட்பணர் தனசெல்வி சோபியா ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment