Wednesday, June 19, 2019

SDPI கட்சி ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம்

SDPI கட்சி ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தொகுதி தலைவர் பத்திகாஜா தலைமையில் நடைபெற்றது.
தொகுதி துணை தலைவர் செய்யது பாசில் வரவேற்புரை நிகழ்தினார்.
சிறப்பு அழைப்பார்களாக மாவட்ட தலைவர் S.S.அப்துல் கனி, மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் கலந்து கொண்டனர்.
கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்கம் முன்னிட்டு முப்பெரும் விழா தொடர்பாக விவாதிக்க பட்டது.
ஜூலை 5ம் தேதி பொட்டல்புதூரில் முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நலதிட்ட உதவி வழங்குவது,
கொடியேற்றம் , பொது கூட்டம் நடத்துவது, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நெல்லை முபாரக், மகளிர் அணி மாநில தலைவர் நஜ்மா, மாநில செயலாளர் அகமது நவவி, மாநில பேச்சாளர் ஜாபர் அலி உஸ்மானி, அழைப்பது என தீர்மானிக்க பட்டது.
மேலும் இரவணசமுத்திரத்தில் கொட்டப்படும் குப்பைகளை இடம் மாற்றக்கோரியும், சின்னத்தெரு, கிட்டக்கல் தெரு மற்றும் ரோட்டடி தெரு ஆகிய பகுதி மக்களுக்கு அழுத்தம் குறைவான மின்சாரம் (Low voltage) வினியோகிக்கப்படுவது சம்பந்தமாகவும் மற்றும் முதலியார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட காந்தி நகரில் இதுவரை கழிவுநீர் ஓடை  அமைக்கப்படாததை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதில் முதலியார்பட்டி மேற்கு கிளை தலைவர் ஹாஜா மைதீன், பொட்டல்புதூர் நகர தலைவர் அலாவுத்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியாக தொகுதி பொருளாளர் துரைமுன்னா இபுராஹிம் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment