Thursday, September 26, 2019

கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் குறைதீர்ப்பு முகாம்



திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகு இனைந்து நடத்திய காசநோய் குறைதீர்ப்பு முகாம் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்சிக்கு பள்ளி சிறார் *மருத்துவர் கோமதி நயினார்* தலைமை வகித்து பேசினார் காசநோயாளிகளிடம் மாத்திரை சாப்பிடும் முறை கேட்டறிந்தார்  மேலும் காசநோய் பரவும் விதம் பற்றி தெளிவாக எடுத்துகூறினார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *கணேசன்* காசநோயாளிகளுக்கு உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்து பற்றி பேசினார்

தொற்றாநோய்கள் குறித்தும் சர்க்கரை நோய் குறித்தும் தொற்றா நோய் செவிலியர் பாலவிஜி பேசினார்.

மேலும் இக் கூட்டத்தில் செவிலியர் வனிதா, சுகாதார ஆய்வாளர் காக்கும் பெருமாள்,பாபு  பகுதி சுகாதார செவிலியர் செல்லதாய்,ஆய்வக நுட்பனர் முருககுமார் ஆற்று படுத்துநர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்





Sunday, September 22, 2019

மதுரையில் காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம்




தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் *22.09.2019 மதுரை YMCA கூட்ட அரங்கில்* வைத்து நடைபெற்றது.

நிர்வாகக் குழு கூட்டத்திற்க்கு மாநில தலைவர் *திரு.மாரியப்பன்* அவர்கள் தலைமை தாங்கினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு.அமிர்தலிங்கம்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில பொது செயயலாளர் *திரு.ஆனந்தன்* அவர்கள் கூட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

1. முன்னாள் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்ட நிகழ்வுகளை நடைமுறை படுத்த வேண்டும்.

2. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.

3. 2017 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டிய விசுவாச வெகுமதியை உடனடியாக வழங்க வேண்டும்.

4. விபத்து நிதி மற்றும் இறப்பு நிதி வழங்க வேண்டும்.

5.விழாக்கால போனஸ், விழாக்கால முன் தொகை வழங்கிட வேண்டும்.

6. விபத்து காப்பீடு மற்றும் குடும்ப நல நிதி வழங்க வேண்டும்.

7. பணியில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

8. E.P.F. & E.S.I. திட்டத்தில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்ட வேண்டும்.

9. காசநோய் பணியாளர்களுக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் நிரந்தர  பணியாளர்களுக்கு Risk Allowance & Risk Leave வழங்குவது போல் மற்ற பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் சுகாதாரத்துறையின் கவனத்திற்க்கு கடந்த 4 ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.   அடுத்த 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேராத பட்சத்தில் விரைவில் போராட்ட அறிவிப்புக்கு மாநில தலைமை தயாராக உள்ளது.

இறுதியாக மாநில செய்தி தொடர்பாளர் *திரு.சுரேஷ்* அவர்கள் நன்றியுறை ஆற்றினார்..

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, September 14, 2019

கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி







கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து  பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது

இன்று காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  முதலில் குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந் நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை ஆகியவை விரிவாக எடுத்துக்கூறினார்

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நபர்களிடமும் காசநோய் அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டுஅறியபட்டது

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும் என்று அறுவுத்தபட்டது

காசநோய்
மேலும் முகாமில் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பேசினார்

கூட்டத்தின் முடிவில் காசநோய் உறுதிமொழி ஏற்கப்பட்டது

இம் முகாமில் காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி மற்றும்  சுகாதார பார்வையாளர்கள் திருப்பதி,முருகன், சுரேஸ்குமார் மற்றும் அலுவலர் இளங்கோ, சாத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி நன்றி கூறினார்

Thursday, September 5, 2019

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக மரம் நடும் விழா

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பாக மூலைக்கரைபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது
விமன் இந்தியா மூவ்மென்ட்
நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
மாணவ மாணவிகளுக்கு மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் விமன்இந்தியா மூலைக்கரைபட்டி நகர நிர்வாகிகள் பீமா,பாத்து
மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்...




நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வரவேற்றார் நிகழ்ச்சியில் நெல்லையின் துணை ஆணையர் ச. சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆசிரியர் தினவிழாவை பற்றி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆசிரியரையே சார்ந்தது எனவும் மாணவர்களிடம் நல்லொழுக்கங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது எனவும் குறிப்பி ட்டார். அதனை தொடர்ந்து தனது   பள்ளி பருவ நிகழ்வினையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் பயிற்சிகளில் பயிற்சி ஆசிரியராக விளங்கும் கலை ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு நெல்லை புறநகர் ரோட்டரி சங்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அருங்காட்சியகம் சார்பாக அவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. நெல்லை புறநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜமால் முகமது ஈசா, செயல் பொருளாளர் ஜெய்லானி,  சான்ஷா பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கவிஞர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.




Wednesday, September 4, 2019

வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது. இதையொட்டி நடந்த விழா நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது...

Saturday, August 31, 2019

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர், மூஞ்சுறு மற்றும் பழங்கள் முதலிய பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சி கலை ஆசிரியர் கார்த்திஷ்வரி அவர்களால் நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் இப் பயிற்சியினை மேற்கொண்டனர்.






Friday, August 30, 2019

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலங்குளம் தொகுதி செயற்குழு கூட்டம்




எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலங்குளம் தொகுதி செயற்குழு கூட்டம்
நடைபெற்றது
தொகுதி தலைவர் பத்தி ஹாஜா அவர்கள் தலைமையில் 30/08/19  அன்று மாலை 06:30 மணியளவில் கட்சியின் முதலியார்பட்டி அலுவலகத்தில்  வைத்து நடைபெற்றது

தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார்கள்
 தொகுதி துணை தலைவர் செய்யது பாஸில்,  செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நெல்லை  மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1,தொகுதி இணை செயலாளராக முதலியார் பட்டி ஜாஹிர் உசேன் நியமிக்கப்பட்டார்

2. ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் போன்ற பகுதிகளில் பார்டி கன்வென்ஷன் நடத்த வேண்டும்

 3. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தொகுதியில் உள்ள இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் நகரம் சார்பாக போட்டியிடும் இடங்களில் பூத் கமிட்டி நியமனம்

4.  இரவணசமுத்திரம் பகுதியில் மகளீர் அணி சார்பாக தெருமுனை கூட்டம் நடத்துவது

5.இரவணசமுத்திரத்தில் நாளை மறுநாள்  ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள திப்புசுல்தான்விளையாட்டு  திடலை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர் களை அழைப்பது ,

6.காந்திநகரில் 30 ஆண்டுகளாக அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் உடனடியாக அரசு அமைத்து தரவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

செயற்குழு கூட்டத்தில்

முதலியார்பட்டி மேற்கு கிளை தலைவர் ஹாஜா மைதீன் (எ) ஹாஜி ,
பொட்டல்புதூர் நகரத் தலைவர் பி.எஸ்.பைசல் ,
பள்ளக்கால்புதுக்குடியிருப்பு நகரத் தலைவர் சேக் செய்யது அலி ,
பள்ளக்கால் நகர துணைத்தலைவர் செய்யது அலி , கலந்து கொண்டனர்.

இறுதியாக  இரவணசமுத்திரம் நகர செயலாளர் இரவணை உசேன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்




Wednesday, August 28, 2019

திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம்

www.nellaijustnow.com
திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறையில் பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் அதன் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர்
சிவ. சத்திய வள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும் மாணவ மாணவிகளுக்கு  எடுத்துரைத்தார்.
அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் பெருமைகளையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.


Monday, August 26, 2019

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்





நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பாக  வாகன காப்பீடு, மற்றும் வாகன
வரிகளை உயர்த்தி  ஏழை மோட்டார்
தொழிலார்களின் வயிற்றில் அடித்து மோட்டார் வாகன தொழிலை அழிக்கின்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்படி வாகன காப்பீடு. மற்றும் வாகன வரிகளை திரும்ப பெற கோரியும் , மோட்டார் வாகன தொழிலை காப்பாற்ற வலியுறுத்தியும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன் வரவேற்புறை நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அஜீத் ரஹ்மான். மாநில செயலாளர் சாந்து இப்றாஹிம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில்  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி  தொழிற்சங்க  மாவட்ட இணை செயலாளர் ஜாபர் சாதிக்
ஏர்வாடி சேக் இஸ்மாயில்  பாளை சிந்தா மற்றும் எஸ்.டி.டி.யூ உறுப்பினர்கள் 200 கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். மாநில பொது செயலாளர் அஜீத் ரகுமான் தனது உரையில் கூறியதாவது.பணமதிப்பு இழப்பீடு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற தவறான  பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகள்  மோடி அரசால்  கார்ப்ரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கபடுகிறது. டாடா, பிரிட்டானியா ,பார்லே போன்ற நிறுவனங்கள் அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தடுமாறுகிறது.  கார்ப்ரேட்களுக்கு ஆதரவான மோட்டார் வாகன சட்ட திருதங்களால்  மோட்டார் வாகன தொழில் அழியும் சூழல் உருவாகி உள்ளது. என கூறினார்.

சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்த முதியவரை மீட்டு மறுவாழ்வளித்த SDPI கட்சியினர் !



 நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆனை குளத்தை சேர்ந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்ததை கவனித்த  அன்வர் சாதிக் என்பவர்  உடனடியாக SDPI கட்சியினருக்கு  தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த
#SDPI செயல்வீரர்கள், மற்றும் தமுமுக சகோதரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றுதிரன்டு, பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு சுத்தப்படுத்தி, காயங்களுக்கு மருந்து வைத்து காவல்துறை உதவியுடன் அருகிலுள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில்  செயல்படும் ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்த்தனர். ஆதரவற்ற முதியவரை மீட்டு தேவையான உதவிகளை செய்த சகோதரர்களின் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்...




திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி





திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில்  கயத்தார் ஒன்றிய அலுவலகத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் வரவேற்று பேசினார்.கயத்தார் மருத்துவ அலுவலர் திலகவதி,  மற்றும் கடம்பூர் மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை வகித்து பேசிய மாவட்ட காசநோய்த் துறையின் துணை இயக்குநர் மருத்துவர்.சுந்தரலிங்கலிங்கம்,  காசநோயை  ஒழிப்பதன் அவசியம் குறித்தும் காசநோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்

காசநோயின் அறிகுறிகள் மற்றும் கண்டுபிடிக்கும் முறைகளையும் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

 மேலும் காசநோயாளிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள அரசு  மாதம் தோறும் நோயாளிகள் வங்கிகணக்கில் செலுத்தி வரும் உதவி தொகை பற்றியும் காசநோயற்ற இந்தியாவை 2025 ல் உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.

 முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்

                இவ்விழாவில் கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் விஜயகுமார்,
தூத்துக்குடி மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, 
  அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

        இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் ஆகியோர்  செய்திருந்தனர்.