Thursday, June 20, 2019

தேனி கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம்

தேனி அருகே கம்மவர் பாலி டெக்னிக் கல்லூரியில் உலக ரத்த தானத்தினை முன்னிட் டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் இரத்த தானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரியின் பொருளாளர் தாமரை கண்ணன், மற்றும் கல்லூரி முதல்வர்  முனைவர் தர்மலிங்கம்ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்ட மேலாளர் முகமது பாரூக், மேற்பார்வையாளர் வைரவன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் பற்றியும், எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கான கட்டுபாடுகள் பற்றியும் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்கள். வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதர மருத்துவமணை ஆலோசகர்கள் முத்துலட்சுமி, அந்தோனி பிரான்ஜிஸ் ஆகியோரது குழுவினர்கள் இரத்தன பற்றி ஆலோசனைகளை வழங்கினார்கள். இம்முகாமில் இரத்த மாதிரிகள் மாணவ மாணவியர்களுக்கு கண்டறிய பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்துருந்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள் கல்லூரி மானவர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment