Monday, June 24, 2019

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுநீதி முகாம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுநீதி முகாம் இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற கோரிக்கை மனு முகாமில் மார்க்கையன் கோட்டை கிராமத்தினை சேர்ந்த குறவர் சமுதாய மக்களின் சார்பாக சமூக ஆர்வலர்  மணிவேல் மற்றும் குறவர் இனத்தினை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனார். அந்த கோரிக்கை மனுவில் தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை யில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். குறவர் இனமக்களான நாங்கள் இதுவரை நாடோடிகளாக அதுவும் கூடார வாசிகளாக வசித்து வருகிறோம். மார்க்கயன் கோட்டையில் உள்ள நெல் களத்தில் கூடாரம் போட்டு வசித்து வருகிறனர். தி டிரென்று கூடாரத்தினை காலி செய்யும் மாறு இடத்தின் உரிமையாளர்கள் கூறுவதாகவும், தற்போது அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் எங்கள் பிள்ளைகள் படித்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை மற்றும் அரசு ஆவணங்கள் முகவரிகளும் மார்க்க யன்கோட்டையில் உள்ளது என்றும் திடிரென்று இடத்தினை காலி செய்வதினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது என்றும் குழந்தைகளும், அங்கு உள்ள குடும்பத்தினை சேர்ந்த வருகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனார் என்றும் மாற்று இடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை அளித்துள்ளனார்

No comments:

Post a Comment