Thursday, May 30, 2019

பாளையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி....



பாளை வண்ணார்பேட்டை அஃப்னா பார்க் உணவகத்தில் வைத்து சமூக நல்லிணக்க  இப்தார்   நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஜக்கரியா ராஜா முஹம்மது ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் மின்னல் டிரஸ்ட் நிறுவனர் மில்லத் இஸ்மாயில்
எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் கனி
மாவட்ட செயலாளர்கள் ஹயாத்முஹம்மதுபேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன்.தமஜக மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபாண்மை பிரிவு தலைவர் தாழை மீரான்,பாளை பகுதி செயலாளர் அசன் ஜாபர் அலி, மமமுக நிறுவன தலைவர்
பாளை ரபிக்.திராவிட முன்னேற்ற கழக
பாளை பகுதி நிர்வாகிகள் பீர்முஹம்மது உள்ளிடோர் கலந்து கொண்டனர்


சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ரத்ததான முகாம்...





Wednesday, May 29, 2019

சுத்தமல்லியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சுத்தமல்லி பகுதியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 சுத்தமல்லி நகரம் சார்பாக நடைபெற்ற  நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நகர தலைவர்  பயாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், நெல்லை கிழக்கு மாவட்ட  செயற்குழு உறுப்பினர்  சேக் முகம்மது சாலி தலைமைதாங்கினார் சுத்தமல்லி காமில்,மஜீத், முன்னிலை வகித்தனர் ,
சிறப்பு அழைப்பாளர் களாக
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கனி ,மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா,மாவட்ட மருத்துவ சேவை அணி தலைவர் ஜெய்லானி,பொருளாளர் முபாரக் அலி
மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர்  மோத்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இலியாஸ் கலந்து கொண்டனர்
சமூக நல்லிணக்கம் குறித்து பேட்டை முஸ்தபா சிறப்புறை நிகழ்த்தினார்,ஜமாத்தார்கள் ,மற்றும்  மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் இறுதியில் சுத்தமல்லி வியாபாரிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் 
சுத்தமல்லி ரிபாய் நன்றி உறை ஆற்றினார் ....

Monday, May 27, 2019

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி.,.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் கம்பெனியும் இணைந்து அருங்காட்சியகத்தில் இன்று வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடத்தினர். காப்பாட்சியர்
சிவ. சத்தியவள்ளி போட்டியினை துவங்கி வைத்தார் திருநெல்வேலி ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் மேலாளர் சத்யநாராயணன் உதவி மேலாளர் சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நாளை நடைபெறவுள்ள நிகழ்வில் வெற்றி கோப்பைகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன மேலும் மகளிருக்கான எம்பிராய்டரி வகுப்புகளும் நடத்தப்பட்டது கலை ஆசிரியர் கவிதா அப்பயிற்சியை அளித்தார்.




Sunday, May 26, 2019

தேனி மாவட்டம் கூடலூரில் நூல் வெளியீட்டு விழா...

தேனி மாவட்டம் கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ரா கணபதி ராசன் எழுதிய வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா என் எஸ் கே பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கதிரேசன் தலைமையிலும் கம்பம் ஏழவிவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சையது அபுதாகிர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழாவில் தேனி தமிழ்ச் சங்க தலைவர் மு.சுப் பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் பேசியபோது சிலம்பு நாயகியான கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சென்று வழிபடும் நிலையினை மாற்றி ஆண்டு முழுவதும் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை வழிவகை செய்ய வேண்டும் என்றும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியினை புதுப்பித்து கட்டப்படுவது மூலம் அங்கு சென்று வர சாலை வசதிகள் மற்றும் அனைத்து வசதிகள் செய்து தர தமிழக மற்றும் கேரள அரசுகள் முன்வரவேண்டும் என்றும் 60 ஆண்டுகளாக இது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு செய்வதும் வரலாற்று செய்திகளை சேகரித்து மங்கள தேவி கண்ணகிக்கும் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திற்கும் பெரும்புகழை சேர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் கணபதி ராசன்அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளங்கோவடிகள் விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று  கூறினார்.

சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி






 நெல்லை கிழக்கு மாவட்டம் மானூர் நகரம்   சீதை குறிச்சியில் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மானூர் நகர எஸ்.டி.பி.ஐ  கட்சியின் சார்பாக, நகர தலைவர் அ.அன்வர்ஷா அவர்கள் தலைமையில்  சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, இந் நிகழ்ச்சியில் சீதை குறிச்சி ஜமாஅத் தலைவர் மஸ்தான், எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு பட்டி கிளை தலைவர் அஜ்மீர், மேற்கு பகுதி தலைவர் பைசல், குறிச்சி குளம் கிளை பொறுப்பாளர் இஸ்மாயில், ரெட்டியார் பட்டி கிளை பொறுப்பாளர் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் அம்பை பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் அலாவூதீன்,        முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கி துரை, சி.எஸ்.ஐ சர்ச் பாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்  மேலும் தெற்கு பட்டி தி.மு.க கிளை தலைவர் பீர், குறிச்சி குளம் முஸ்லிம் லீக் பொறுப்பாளர் நிஜாம், சீதை குறிச்சி தி.மு.க பொறுப்பாளர் மைதீன் மற்றும் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மானூர் நகர செயலாளர் ஹாலித் முகமது நன்றி கூறினார், மேலும் ஊர் பொது மக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தேனி : பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்



பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பொது சுகாதாரத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் பணி மாறுதல்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது எனவே தற்சமய உடனடியாக பதவி உயர்வுகள் பணி மாறுதல்கள் உள்ளிட்டவைகள் விரைந்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

மழை வேண்டி மரம் நடும் விழா ...

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக 
மரம் நடும் விழா நடைபெற்றது
இதில் மாநில தலைவர் G.முனுசாமி
மாநிலத் துனைத்தலைவர் S.சிதம்பரம்
மற்றும் மாநில தலைவர் ( வர்த்தகப்பிரிவு )
S.மதியழகன் அவர்களின் தலைமையில் மற்றும் தென்காசி காவல் ஆய்வாளர் K.ஆடிவேல் அவர்கள் முன்னிலையிலும்., திருநெல்வேலி மாவட்ட மாணவரணி,
இளைஞரணி
சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ இலஞ்சி குளத்திலுள்ள கரையில்  காலை 7 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது... ( புங்கன்,வேம்பு,நாவல், இலுப்பை,அரசமரம்,பூவரசு, பாதாம், செரி மரம்.,
மற்றும் பனை விதைகளும் நடப்பட்டது,
மேலும் இச்சங்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்,
சமூக ஆர்வலர்களும், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு
மரம் நடும் விழாவில் கலந்து கொண்டனர்.. மேலும் மதுரை மாவட்ட செயலாளர் Dr.லிங்கசெல்வி
மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர்
S.பெரியதுரை

திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பழனி பாஸ்கர், திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளர் பழனிகுமார், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர்
S.K.பிஸ்வாஷ், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ்,
திருநெல்வேலி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சுமு.முருகன், திருநெல்வேலி மாவட்ட மருத்துவ அணி தலைவர் எட்வின் ஜோசப், திருநெல்வேலி மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி,
திருநெல்வேலி மாவட்ட மாணவரணி தலைவர் வேல்பாண்டி, திருநெல்வேலி மாவட்ட மாணவரணி துணை தலைவர் அருண், திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் அஜீஸ்,
திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் சிவா
மற்றும் தென்காசி மாணவரணி தலைவர் ஷேக் முகமது, தென்காசி மாணவரணி செயலாளர் வேல்முருகன், தென்காசி மாணவரணி துணை தலைவர்
ஜோதி மணிகண்டன், தென்காசி இளைஞரணி தலைவர் பாசித், தென்காசி இளைஞரணி செயலாளர் மகேஷ்,
தென்காசி இளைஞர் அணி துணைத் தலைவர் செல்வகுமார்

மற்றும் உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த் சக்திவேல், பாலமுருகன்,இசக்கி, கார்த்திக்,,
இவர்களுடன் ப்ரானா மரம் வளர் இயக்கம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர்..
தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக., தென்காசி காவல் ஆய்வாளர்
கே.ஆடிவேல் அவர்களுக்கு.,
 *மக்கள் பணியில் ஆற்றல் மிகு சேவையாளர் விருது* வழங்கப்பட்டது..



பறவைகளுக்கு தண்ணீர்....


பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு சார்பில்







திருநெல்வேலி,பாளையங்கோட்டை,ரஹ்மத் நகர் சதக் அப்பா கல்லூரி தெருவில் உள்ள மரங்களில்  பிளாஸ்டிக் பாட்டிலை கட்டி
பறவைகளுக்கு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு இளைஞர்களால் தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் என்பதால் பறவைகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது.

பறவைகளை அழிவிலிருந்து பாதுகாப்போம்.

Saturday, May 25, 2019

ஆலங்குளம் மரம் நடும் விழா..





ஆலங்குளம் இரட்சண்யபுரம் CSI கிறிஸ்து ஆலயம் 45வது பிரதிஷ்டை பண்டிகை விழாவினை முன்னிட்டு ஆலங்குளம் பசுமை இயக்கத்தின் சார்பில் ரேனியஸ் நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தேனி மாவட்ட செய்தி...



தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் கென்யாவைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தய  போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயமானது தேனி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி அன்னஞ்சி விலக்கு பெரியகுளம் சாலை தேனி பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வந்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் வரையில் மொத்தம் 12.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இந்தப் போட்டியானது 18 வயது முதல் 30 வயது வரை ஒரு பிரிவாகவும், முப்பத்தி ஒரு வயது முதல் 50 வயது வரை மற்றொரு பிரிவாகவும் இரண்டு பிரிவாகவும் நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள பிரிவில் முதலாவது பரிசினை திருப்பூரைச் சேர்ந்த சூர்யாவும்,இரண்டாவது பரிசினை வினோத்குமார் என்பவரும், மூன்றாவது பரிசை ராம்குமார் என்பவரும்  பெற்றுச் சென்றனர். அதேபோல முப்பத்தி ஒரு வயது முதல் 50 வயது வரை உள்ள பிரிவில் ஜெகதீசன் முனுசாமி என்பவர் முதல் பரிசையும், கென்யாவைச் சேர்ந்த பீட்டர் மியாங்கி இரண்டாம் பரிசினையும், ஆசாத் என்ற பெண்மணி மூன்றாவது பரிசையும் பெற்று சென்றனர். இந்த போட்டியில் முதலாவது பரிசாக
ரூ.9000 மற்றும் சான்றிதழ், இரண்டாவது பரிசாக 6000 மற்றும் சான்றிதழ் ரூபாய் மூன்றாம் பரிசாக 3000 மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. பரிசுகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வழங்கினார்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று துவங்கியது

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று துவங்கியது.

_நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் ஒன்னறை டன் ஆரஞ்சு, திராட்சை  பழங்களை கொண்டு வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன._



Friday, May 24, 2019

அமமுக to அதிமுக...



அமமுகழக தென்மன்டல கூடுதல் பொறுப்பாளர் உயர் திரு R.P ஆதித்தன் அவர்கள்..கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்..
கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார்..


ஆலங்குளம் பசுமை இயக்கம் மூலம் மரக்கன்றுகள் பராமரிப்பு...

ஆலங்குளம் பசுமை இயக்கம் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகம் உள்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கபடுகிறது. இன்று மாலை செடிகளுக்கு களப்பணியாளர்கள் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்றது.



Wednesday, May 22, 2019

நெல்லை கிழக்கு மாவட்ட எஸ். டி.டி.யூ.தொழிற்சங்க செயற்குழு கூட்டம் ...




 எஸ். டி.டி.யூ(SDTU) தொழிற்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் 22/05/2019     மாவட்ட அலுவலகம்  மேலப்பாளையத்தில் வைத்து    மாவட்ட  செயலளார் ஐ.பஷீர்லால் தலைமையில்  நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் சந்தண மாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணைத் தலைவர் கல்வத், மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

எஸ். டி.பி.ஐ. கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்        எஸ்.எஸ்.ஏ.கனி  கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்

தீர்மானம்
இக்கூட்டத்தில் 1.தொழிலாளர்கள் நல வாரிய அட்டை பெற்று தருவது.

2,தொழிலாளர்களுடைய சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது

3,  உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது

4. சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது
போன்ற  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவாக
எஸ். டி.டி.யூ(SDTU) மாவட்ட செயற்குழு உறுப்பினர்
 ஏர்வை ஷேக் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.