தமிழக அழிவு திட்டங்கள் அணு உலை ,மீத்தேன் , ஹைட்ரோகார்பன், கெய்ல், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, மேற்கண்ட திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல் கனி தலைமை தாங்கினார் ,மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர்கள் பர்கிட் அலாவுதீன், பேட்டை முஸ்தபா, மாவட்ட பொருளாளர் களந்தை மீராஷா முன்னிலை வகித்தனர்
மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது வரவேற்புரை ஆற்றினார்
கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் முகம்மது அலி, கண்டன உரையாற்றினார்கள்
தமிழக அழிவு திட்டங்களை ரத்து செய்ய வழியுறுத்தியும் மத்திய மாநில அரசை கண்டித்தும் கோசம் எழுப்பப்பட்டது
மாநில செயலாளர் கண்டன உரையில் யானை கட்டி போர் அடித்து அனைவருக்கும் உணவளித்த தமிழகத்தை இந்தியாவின் சோதனைக் கூடமாக்கி செல்லறித்து வரும் மத்திய பாஜக அரசின் அழிவு திட்டங்களி விருந்து தமிழகம் பாதுகாக்கபட வேண்டும்
தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் பெரும்பாலும் சாமான்ய மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் திட்டங்களாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுமாகவே இருக்கின்றன . இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதிக்க கூடிய திட்டங்களை
அதிக அளவில் செயல்படுத்துவதில் மோடி அரசு மும்முரம் காட்டி வருகிறது
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தின் பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களையும், அணு உலைகள், ஆபத்தான அணுக்கழிவு மையங்கள் அமைத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களையும் நியூட்ரினோ பெயரில் தேனி, மதுரை மாவட்டங்ககளயும் , கெயில் எரிவாயு திட்டங்களின் பெயரால் கொங்கு மாவட்டங்களையும் சாகர்மாலா திட்டத்தின் பெயரால் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்க நினைக்கிறது மக்கள் விரோத மத்திய பாஜக அரசு .இப்படி தமிழகத்தை மண்டல வாரியாக அழிவுத் திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவின் சோதனை கூடமாக மாற்றி வருகிறது மத்திய அரசு .
வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசகார திட்டங்கள் ரத்து செய்யபட வேண்டும், விவசாய நிலங்களிலிருந்து கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்
தமிழகத்தை சூழ்ந்துள்ள இத்தகைய பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து தன்னலமற்று மக்கள் நலனுக்காகப்
போராடும் மக்கள் இயக்கங்கள் , அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப எஸ்.டி.பி.ஐ கட்சி அழைப்பு விடுக்கிறது என்று தனது உரையில் சுட்டி காட்டினார்
ஆர்பாட்டத்தில்
SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹைதர்இமாம், செயலாளர் பஷீர்லால், இணைச் செயலாளர் ஜாபர்,
மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ்ஆலிமா, பொருளாளர் பாத்திமா,
வர்த்தகர் அணி டவுன்பீர், சேக்சாலி,
மருத்துவ சேவை அணி ஜெய்லானி, முபாரக்அலி, சேக்
வழக்கறிஞர் அணி சார்பில் வழக்கறிஞர்கள் ஆரிஃப்,சதாம், ரத்தினக்குமார்,
தொகுதி நிர்வாகிகள் மின்னதுல்லாஹ், சலிம்தீன், புஹாரி, காசிம், சுலைமான், ஒயிஸ், பாதுல் ,பத்திகாஜா
உட்பட நாற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment