Tuesday, July 30, 2019

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை_மயிலை ஒன்றியத்திற்க்குட்பட்டதும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு


தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை_மயிலை ஒன்றியத்திற்க்குட்பட்டதும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொருவர் வீட்டிற்கு மரம் வளர்ப்பது அவசியம் பற்றிய விழிப்புணர்வு,
சைல்டு லைன் 1098  குறித்த விழிப்புணர்வு கோலத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  தேனி சைல்டு லைன் சார்பில் அணி உறுப்பினர்கள் கார்த்திக், சந்திரா, மணிவண்ணன், பவித்ரா,கற்பக வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதி பொது மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Sunday, July 28, 2019

SDPI கட்சி பேட்டை 48வது வார்டு சார்பாக ரஹ்மான் பேட்டை ரேசன் கடை அருகில் *இரத்ததானம்* மற்றும் *இரத்தவகைப்பிரிவு* கண்டறியும் முகாம்


SDPI கட்சி  பேட்டை 48வது வார்டு சார்பாக ரஹ்மான் பேட்டை ரேசன் கடை அருகில் *இரத்ததானம்* மற்றும் *இரத்தவகைப்பிரிவு* கண்டறியும் முகாம் நடைபெற்றது. வார்டு தலைவர் *சாகுல்ஹமீது* தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் *காஜாமைதீன்* வரவேற்புரை நிகழ்த்தினார்.வார்டு நிர்வாகிகள் *சித்திக்*திவான்முகம்மது*சேகுநூகு* ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர் *பேட்டைமுஸ்தபா* மருத்துவ சேவை அணி மாவட்டத்தலைவர் *ஜெய்லானி* மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *சேக்சாலி*முபாரக்அலி* நெல்லை தொகுதி தலைவர் *காசிம்* மற்றும் R P பள்ளிவாசல் செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு பொருளாளர் *திவான்அசதுல்லா* நன்றியுரை ஆற்றினார். இம்முகாமில் 6பேர் இரத்ததானம் வழங்கினர் 98 நபர்களுக்கு இரத்தவகைப்பிரிவு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ரோசனப்பட்டி கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி




  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ரோசனப்பட்டி கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு சைல்டு லைன் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது இதில் சைல்டு லைன் உறுப்பினர்கள் ராஜா , விஜயலெட்சுமி, சண்முக வள்ளி , கோகிலவாணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்

Saturday, July 27, 2019

தேனியில் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை




இளைய தலைமுறை மற்றும் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பின் சார்பாக நமது முன்னாள் ஜனாதிபதி ஏவுகனை நாயகன், இளைஞர்களின் கனவு நாயகன் DR.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு   தேனி நேரு சிலை பின்புறம் கலாம் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பாரதத்தினை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறையின் இயக்குநர்
M.K.மருத துரை, செயலாளர் M.அய்யப்பராஜன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத்  ஒருங்கிணைப்பாளர் தமிழரசன்,மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் ,நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த கையொழுத்து விழிப்புணர்வை தலைமையேற்று துவக்கி வைத்ததேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் MKM.முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்.,தனது முதல் கையெழுத்தை பதிவு செய்து நிகழ்வினை தேனி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ்அவர்கள் சிறப்புறை ஆற்றி சிறப்பித்தனர்..மேலும் அனைத்து அமைப்புகளை  சார்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள் , மற்றும்
பொதுமக்கள்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குற்றாலத்தில் படகு குழாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வென்ன மடை குளத்தில் உள்ள படகு குழாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Friday, July 26, 2019

மத்திய அரசின் வேளாண்மை முன்னோடித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கழுநீர்குளம் கிராமத்தில் நடைபெற்றது.






இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கழுநீர்குளம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் துணை வட்டாட்சியர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில் மண்ணின் தரம் நன்றாக இல்லையென்றால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது என்றும் எனவே விவசாயிகள் தங்களுடைய மண்ணின் தரத்தை வேளாண்துறை மூலமாக ஆய்வு செய்து பின்பயிரிடல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் நீர் மேலாண்மை திட்டங்களை தெரிந்து கொண்டு பண்ணையக்கூட்டை அமைத்து நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் செயல்படுத்தபடும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கீழப்பாவூர் வேளாண் உதவி இயக்குனர் உதயக்குமார் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், பிரதமரின் மண்வள அட்டை, பிரதம மந்திரி நீர்பாசன திட்டம் மற்றும் மானியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தோட்டக்கலை துறை மூலம் செயல்படும் பிரதமரின் பயிர் காப்பீடு மற்றும் பிரமரின் சொட்டுநீர்ப் பாசன திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ராம் பிரபா பொறியியல் துறை மூலம் செயல்படுத்தபடும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கீழப்பாவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் பொன்ராஜ் கண்ணன் பேசுகையில் விவசாயிகள் தங்ககள் அருவடை செய்த பயிரினை ஆறுமாத காலம் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாத்து பயிருக்கு உரிய விலை பெறலாம் என்று தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் நிதிசார் கல்வி ஆலோசகர்கள் திரு.மகாலிங்கம் மற்றும் திரு.பார்திபன் கலந்து கொண்டு பல்வேறு கடனுதவி; திட்டங்கள்  குறித்தும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் விளக்கினர். முன்னோடி வங்கி அலுவலர் கிருஷ்ணன் கிஷான் கிரெடிட் கார்டு குறித்து எடுத்துரைத்தார். கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து பயிற்சியாளர் தீனதயாளன் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் விவசாயகளுக்கு மானியத்துடன் கூடிய மழை துவான், ஸ்பிரேயர், நுண் உரம், உயிர்சத்து உரங்கள் மற்றும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் வேளாண் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்ச்சியும் இடம்பெற்றது. நிறைவாக துணை வேளாண்மை அலுவலர் முருகன் நன்றி தெரிவித்தார். ஏராளமான விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.



கள விளம்பர அலுவலர்,
மக்கள் தொடர்பு கள அலுவலகம்,
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்,
திருநெல்வேலி.

Thursday, July 25, 2019

மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி...

 




 மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்விளையாட்டு அமைச்சகம் தற்பொழுது தூய்மை பாரதகோடை கால தீவிர தூய்மை பணி(SBSI -2.0) குறித்து தீவிர தூய்மை பணியில் ஈடுபடஇளையோர் மன்றங்களுக்கு அறிவுறித்தியுள்ளது .அதனடிப்படையில் தேனி நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் இன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்தும், விவாசயத்தில் பயன்படுத்தும் கிரிமி நாசினியாக பயன்படுத்துதல் குறித்தும் குன்னூர் அருகே உள்ள அம்மச் சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு விளக்கி செய்முறை மூலம் விளக்கப்பட்டது மேலும் மாட்டுச்சானம் மற்றும் இயற்கை காய்கறி பழங்கள் மூலம்கழிவுனால் கிடைக்கும் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை முறையில் வீட்டுக்கு பயன்படுத்தபடும் சாண எரிவாயு தயாரித்தல்குறித்து செயல் விளக்கங்களுடன் விவசாயிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் நேரில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. சாண எரிவாயு விழிப்புணர்வு முகாமை இளைஞர் மன்ற தலைவர் பரமசிவம் மற்றும் மன்ற உறுப்பினார்கள் செய்திருந்தனர். மேலும் தனிநபர் கழிப்பறை பயன்படுத்துதல் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில்கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்.







நெல்லையை உலுக்கிய நெல்லை மாவட்ட  முன்னாள்   மேயர்    உமா மகேஸ்வரியுடன் கொலை செய்யபட்ட  பணிப்பெண் மாரியம்மாள்  குடும்பத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட
செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில்  மாரியம்மாள் அவர்களின்  மூன்று குழந்தைகளுக்கு அரசு தரப்பில் இருந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும். குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். அதே போல் திருநெல்வேலி  மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல  விரிவாக்க பகுதிகளான  டீச்சர்ஸ் காலனி, அமுதாபெட், ரோஸ்நகர் போன்ற பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை வசதி,  மின்விளக்கு வசதி, போன்றவற்றை செய்து தரகோரியும்,
மக்கள் நடமாட்டம் குறைவா உள்ள
பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும் நெல்லையில் விரிவாக பகுதிகளில் காவல்துறை ரோந்து பணிகளை தீவிர படுத்தவும், மேயர் கொலை வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளை  விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிகழ்வில் எஸ்.டி.டி.யூ மாவட்ட செயலாளர் பசீர்லால், துணை தலைவர் கல்வத், பொருளாளர் மைதீன்,
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பாளை  தொகுதி இணை  செயலாளர்  புஹாரி சேட், மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள்
சிந்தா, பர்கிட் கிளை தலைவர் சுபைர் முகமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, July 22, 2019

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி...



நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக தனியார் பேருந்துகள் கொண்டுவந்து நிறுத்தப்படுவதால் மற்ற பேருந்துகள் நிறுத்தவும், வெளியே எடுக்கவும் சிரமமாக உள்ளது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

Sunday, July 21, 2019

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு பஸ் நிலையத்திலிருந்துதேனி சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை துவக்கப்பட்டது .




தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்துள்ளது. அதனடிப்படையில் கடமலை மயிலை ஒன்றியத்தில்  கடமலைக்குண்டு பஸ் நிலையத்திலிருந்துதேனி சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை துவக்கப்பட்டது .இதுகுறித்து தேனி மாவட்ட  இயற்கை வேளாண்மை  உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்  செந்தில் குமார் அவர்களிடம் கூறியபோது இந்த உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் தற்பொழுது செயல்படுகிறது இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தன்னுடைய தோட்டத்தில் விளையும் பொருட்களை நேரடியாக வந்துவிவசாய காய்கறிசந்தையில் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் பொதுமக்களுக்கு குறைவான விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கின்றன. இந்த காய்கறிசந்தை திறப்பதற்குமுன்னாள் தேனி ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் வாங்கி வந்தனர் தற்போது தங்கள் கிராமத்தில் சந்தை திறந்து உள்ளதால் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சந்தையில் வந்து குறைந்த விலையில் காய்கறிகள் வாங்கி பயனடைந்து வருகின்றனர் என்று கூறினார்.

Thursday, July 18, 2019

ஆக்கிரமிப்பு மற்றும் கட்டிடக் கழிவுகளில் சிக்கி தவிக்கும் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா*???

*


மேலப்பாளையத்தின் மிக முக்கிய சாலைகளில் தற்போது ரெட்டியார்பட்டி சாலையும் ஒன்றாக இருந்து வருகிறது.  மேலப்பாளையம் நகரின் விரிவாக்க பகுதியான இந்த சாலையில் தான் பல்வேறு குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், நிறைய உள்ளன.

இந்த பிரதான சாலையே மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர், 80 அடி அகலம் கொண்ட இந்த *ரெட்டியார்பட்டி சாலை தற்போது அதன் ஆரம்ப பகுதியான சந்தை பகுதியிலேயே தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு* தற்போது *இந்த சாலை 40 அடியாக சுருங்கி விட்டது,*
இது மட்டுமல்லாமல் ஆங்காங்கே கட்டிட கழிவுகளும் சாலையை ஆக்கிரமித்துள்ளது. அதுவும் *தாய் நகர் பூங்கா அருகே கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகள் மற்றும் கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.*

மாநகராட்சி சட்டப்படி பொது இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டினால் அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இருந்தும் இது வரை நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது என்று பொது மக்கள் கூறுகின்றார்கள்...

இன்று தினகரன் பத்திரிகையில் வெளியான மாநகராட்சி செய்தி குறிப்பில், சாலையோரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், *மேலப்பாளையம் மண்டல உதவி செயற் பொறியாளர் ரெட்டியார்பட்டி சாலையில் கட்டிட கழிவுகளை சேமித்து வைத்தவர் மீது நடவடிக்கை எடுப்பாரா ???

Tuesday, July 16, 2019

மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை மாணவிக்கு விமன்ஸ் இந்தியா மூவ்மெட் வாழ்த்து.




சேலத்தில் மாநில அளவிலான மாற்று திறனாளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் நெல்லையை சேர்ந்த குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி   சௌபியா பானு சப்ஜூனியர் பிரிவில்  முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன்ஸ் இந்தியா மூவ்மெட் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா தலைமையில்    நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள்  கூறினர். இந்நிகழ்வில் பர்கிட்மாநகரம் கிளை நிர்வாகிகள் .  ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக்குழுமங்கள் சார்பாக மினி மராத்தான் போட்டி நடைபெற்றது .








இந்த போட்டியில் பதினேழு,பதினெட்டு வயது உள்ளவர்களுக்கும், பெண்களுக்குமான தனிப்பிரிவு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மினி மராத்தான் போட்டியினை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மாரத்தான்  போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் 19 வயது உள்ளவர்களுக்கு ஐந்து கிலோ மீட்டரும், 17 வயதுள்ளோருக்குக்கு நான்கு கிலோ மீட்டரும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி மூன்று கிலோ மீட்டரும் நடத்தப்பட்டது.இந்த மினி மாரத்தான் போட்டியில் 600 பேர் கலந்து கொண்டனர்.

17 வயதுக்கு உட்பட்டவர்கள் மினி மாரத்தான் போட்டியில் 4 கிலோமீட்டர் வரை நடத்தப்பட்ட போட்டியில் பி.ஸ்ரீராம் முதல் பரிசும், பாலகுருநாதன் இரண்டாம் பரிசும்,  மதன் மூன்றாம் பரிசும் பெற்றனார்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் எம்.பெருமாள் முதல் பரிசும் ,விக்னேஸ்வரன் இரண்டாம் பரிசும் மனோஜ்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனார். பெண்களுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில்
கனிஷ்கர்கனி முதல் பரிசும் ராஜமதுமிதா இரண்டாம் பரிசும், தீபா ராணி மூன்றாம் பரிசும் பெற்றனார்.மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ 5,000 ரூபாய் ரொக்கப் பணமும்,, இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் ,மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் இரண்டாமிடமும்,அதன் பின் வந்த மூன்று பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு டீசர்ட் வழங்கப்பட்டது. பரிசுகளை தலைவர் முருகன் பொருளாளர் பழனிச்சாமி,
உபதலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.          பின்பு நடைபெற்ற மாணவர்களின் காமராஜர் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் அணைகள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் மதிய உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் வாகன ஊர்வலமும்மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட ஊர்வலமும் பள்ளியில் தொடங்கி தேனி நேரு சிலைவழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பள்ளியை வந்தடைந்தனர் பின்பு நாடார் சரஸ்வதி பள்ளியில் ரத்ததான முகாமினைதேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் அந்த ரத்ததான முகாமில் காமராஜரின் பேத்தி கமலிகா அவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தார். அந்த பள்ளியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் அரசு ஊழியர்கள் காவல்துறை சமூக ஆர்வலர்கள் சுமார் 400 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார்கள் ரத்த தானம் செய்த அனைவருக்கும் மரக்கன்றுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து நாடார் சரஸ்வதி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு பள்ளி நிர்வாகிகள் .அரசியல் தலைவர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும்  காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Monday, July 15, 2019

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.





    ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மொக்கராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் கண்ணன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட பொதுசெயலாளர் முருகன், தேனி ஒன்றிய தலைவர் திலகராஜ் நிர்வாகிகள் கார்த்திக், நாகராஜ், ரவி, முனீஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ஆண்டிபட்டமாவூற்று வேலப்பர் கோவில் கும்பாபிசேகத்தை நடத்த வேண்டும். இந்து கோவில்களில் தரிசன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.கூட்டத்தில் தேனி மாவட்ட அன்னையர் அணி, ஆட்டோ டிரைவர்கள் அணி உள்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, July 14, 2019

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நெல்லை மாணவி முதலிடம்.





மாநில அளவிலான மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சப் ஜூனியர் பிரிவில் பாளை குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி முகமது சௌபியா பானு முதல் பரிசை வென்றார்.

Saturday, July 13, 2019

புளியரை யெஸ் (S) வளைவு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினந்தோறும் இரவு நேரங்களில் மோசமான சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை


நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புளியரை யெஸ் (S) வளைவு பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினந்தோறும் இரவு நேரங்களில் மோசமான சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும்  நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.