Sunday, June 23, 2019

தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும்தேனி அமைதி அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள்

 தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும்தேனி அமைதி அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள் தேனி அல்லிநகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இப்போட்டிகள்  மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையிலும், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் MK Mமுத்துராமலிங்கம் , இளையதலைமுறை இயக்குனார் M. மருத துரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இப்போட்டியினைதேனி அல்லிநகர காவல் நிலைய ஆய்வாளர்கள் சன்முக லட்சுமி, தெய்வம் , அமைதி அறக்கட்டளை இயக்குனர் M.அய்யப் பராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இப்போட்டிகளில்130ம் மேற்பட்டகல்லூரி பள்ளி மாணவர்கள்  கலந்து கொன்டு சிலாம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனார். இப்போட்டிகள் அனைத்தும் வயதின் அடிப்படையில் நடைபெற்றது.இப்போட்டிகளில் இளைய தலைமுறை நண்பர்கள், பசுமை தேனி நண்பர்கள், மழைத்துளி பவுண்டேசன் நண்பர்கள், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினார் ,வையை தமிழ் சங்க நண்பர்கள், சிறகுகள் ஆதரவற்றோர் காப்பகம், கலாம் நண்பர்கள், தேனி லெனின் அமைதி அறக்கட்டளை , லத்திகா பழமுதிர்சோலை ஆகிய அமைப்பினை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்ட ஏற்பாடுகள் செய்து வரவேற்புரைநிகழ்த்தினார்கள். இப்போட்டிகளை கான தேனி மற்றும் மற்ற மாவட்டங்களிலிருந்து சிலம்பாட்டகலைஞர்கள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார்


No comments:

Post a Comment