Monday, June 24, 2019

மேலப்பாளையத்தில் ஆறு ஆண்டுகளாக வீணாக சாக்கடைக்கு செல்லும் குடிநீர்




திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்க்கு உட்பட்ட நேருஜி சாலையில் (காவல் நிலையம் to பசீரப்ப பள்ளிவாசல் செல்லும் வழியில்) சாலை ஓரத்தில் உள்ள பொது நல்லியில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் சாக்கடையில் வீணாக கலக்கிறது.

இது சம்பந்தமாக அங்குள்ள பொது மக்களிடம் கேட்டதில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடிநீர் வீணாகுவதாக கூறுகின்றனர். தற்போது கோடை வெய்யிலின் காரணமாக பாபநாசம் அணை வரட்சியின் பிடியில் உள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இந்த சூழ்நிலையில் குடிநீர் வீணாக சாக்கடைக்கு செல்வதை பார்த்தால் வேதனையாக உள்ளது.

நகரின் முக்கிய வீதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடிநீர் வீணாகுவதை  மண்டல அலுவலர், ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் மண்டல செயற் பொறியாளர் ஆகியோர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்...

No comments:

Post a Comment