Sunday, June 30, 2019

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம்









பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் இன்று (30.06.2019) மாலை நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் துவங்கி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில் நிறைவு பெற்றது. பேரணியை மாநில பொதுச்செயலாளர் A. காலித் முகம்மது துவக்கி வைத்தார். நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் தலைமை ஏற்றார் மாநில செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக PFI தேசிய பொதுச் செயலாளர் மு. முகம்மது அலி ஜின்னா SDPI கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

PFI தேசிய பொதுச் செயலாளர் மு. முகம்மது அலி ஜின்னா தன்னுடைய உரையில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒற்றுமை அணிவகுப்பையும் மற்றும் பொதுக்கூட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஸ்தாபன நாளான பிப்ரவரி 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு எதிர்மறையான சூழல் ஆளும் வர்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது. அதை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்து இன்று மிக எழுச்சியோடு ஒற்றுமை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நமது மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆபத்தான காலகட்டத்தின் ஊடாக நமது நாடு சென்று கொண்டிருக்கிறது.

 மோடிக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக யார் எது பேசினாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், குறி வைக்கப்படுகிறார்கள். சமீபமாக இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சஞ்ஜீவ் பட் என்கிற IAS அதிகாரி அரசியல் பழி வாங்குதல் மூலமாக அவர் ஆயுள் கைதி ஆக்கப்பட்டது. சஞ்ஜீவ் பட் மோடிக்கு எதிராக நானாவதி கமிஷன் முன்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் உண்மையான சாட்சியத்தை அளித்தார் என்பதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டு இருக்கிறார். இப்படி பல சம்பவங்கள் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

அதே போன்று தான் இன்று பன்முகத்தன்மை வாய்ந்த நம்முடைய தேசத்தில் அவரவர் தங்களின் மதத்தையும் வழிபாட்டையும் நடத்த முடியாத ஒரு சூழல் ஏற்ப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள், துரத்தப்படுகின்றார்கள் அடித்தும் கொல்லப்படுகின்றார்கள். இது நமது நாட்டில் பல பகுதிகளில் சாதாரணமான ஒரு நிகழ்வாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு மனிதனை கொள்வதற்கு ஒரு தொப்பி அல்லது ஒரு தாடி ஒரு ஜிப்பா அல்லது ஒரு முஸ்லிம் என்ற ஒரு அடையாளம் இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த காரணமும் தேவையில்லை என்ற வெறுப்பும் குரோதமும் விதைக்கப்பட்டிருக்கிறது.
எனவே இதற்கு எதிராக சொந்த நாட்டு குடிமக்களையே சந்தேகத்தின் நிழலில் நிறுத்தி அவர்களை அழிப்பதற்கு அல்லது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் NRC என்கிற செயல்திட்டத்தை BJP யும் RSS ம் தவறாக பயன்படுத்தக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா ஆதாரங்களையும் கொண்டு என் ஆர் சி அலுவலகத்தில் சமர்ப்பித்தாலும் முஸ்லிம் என்ற காரணத்திற்காக அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது காரணம் கேட்டால் No Reason என்று பதிலளிக்கிறார்கள். அவர்களாகவே 25 லட்சம் மக்கள் முஸ்லிம் இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு பார்மாலிட்டி காக exercise ஐ நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கூடாரங்களிலிருந்து கேட்க முடிகிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் நம் இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே அழிவின் பாதையில் கொண்டு சேர்க்கக்கூடிய அபாயகரமான ஒரு திட்டம். மாநில உரிமைகளை மெல்லமெல்ல பறித்து மத்திய அரசின் காலடிகளில் சரணாகதி அடையக்கூடிய ஒரு நிலை தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற செயல் திட்டம். மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் மக்களுடைய நியாயமான உரிமைகள் மீதும் அவர்களுடைய உயிர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டையும் மக்களையும் அதிகமாக நேசிக்க கூடிய நாம் அமைதியாக கடந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நீதிக்காக உரிமைக்காக போராடுவதற்கு நாம் முன் வரவேண்டும். ஆர்எஸ்எஸ் பாசிசம் என்பது வீழ்த்த முடியாத ஒரு சக்தி ஒன்றும் அல்ல. இதைவிட எவ்வளவோ பெரிய சக்திகளை எல்லாம் சரித்திரம் சந்தித்து இருக்கிறது. அவை இங்கு தடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதியின்பால் அக்கறை கொண்ட நாம் உறுதியாக போராடினால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் அஸ்திவாரமே பொய் என்பது தான். எனவே பொய் என்பது அதன் இயல்பிலேயே பலவீனமானது, அந்தப் பொய் என்பதற்கு இது பொய் என்பது வெளிப்படும் வரையில்தான். உண்மை இயல்பிலேயே வலிமையானது. அது வெளிப்படும் போது பல மடங்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது.
எனவே விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியா தோல்வியா என்ற விளைவுகளை எல்லாம் இந்த நீதிக்கான போராட்டத்தில் காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி போராடியும் பார்த்ததாக எந்த ஒரு முன் உதாரணம் இல்லை. நீதிக்காக போராடி அவர்களுடைய பார்வையில் தோற்றவர்கள் தான் தீரன் திப்பு சுல்தான், பகத் சிங் இன்று நாம் இங்கு நின்று கொண்டு இருக்கின்ற திருநெல்வேலி கட்டபொம்மன்.

 இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். அவர்கள் எல்லாம் நீதிக்காக போராடி தோற்றவர்கள் ஆக இருக்கலாம். ஆனால் அவர்கள் தான் இன்றளவும் வாழ்கின்றார்கள். எனவே வெற்றியா தோல்வியா என்பதை பொருட்படுத்தாமல் நாம் எதற்காக வாழ்கின்றோம் எதற்காக சாகின்றோம் என்பதுதான் அர்த்தம் மிகுந்த கேள்வியாகும். எனவே நீதிக்காக போராடினால் வரலாறு உங்களை வாழ்த்தும் இல்லை என்றால் காலங்காலமாக வரலாறு உங்களை பழிக்கும் எனவே நம்முடைய தேசத்தை நம்முடைய மக்களை நம்முடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக பாசிச கொடுங்கோலர்களை எதிர்த்து போராடுவதற்கு இந்த நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.

இறுதியில் நெல்லை மாவட்ட தலைவர் J. முகம்மது அலி நன்றியுரை கூறினார்.  நிகழ்ச்சியில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

கல்லூரி மாணவிகளுக்கு வாருங்கள் வெற்றி காண்போம் நிகழ்ச்சி







தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரியில் இந்த வருடத்தில் புதிதாக சேர்ந்த சுமார் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இதில் கலந்து கொண்ட *மனநல மருத்துவர் எஸ். சிவசைலம்* வாருங்கள் வெற்றி காண்போம் என்ற தலைப்பில் பேசினார்.

சுமார் 1000 மாணவிகள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் திருமதி. ஜெயபாரதி செய்திருந்தார்.

Thursday, June 27, 2019

மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்களுக்கு கழிவுநீர்த்தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது குறித்த பயிற்சி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்களுக்கு கழிவுநீர்த்தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது குறித்த  பயிற்சியளிக்கப்பட்டது.



கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்காசநோய் சிறப்பு முகாம்





கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய்க்கு மாத்திரை உட்கொள்ளும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமைவகித்து பேசியதாவது

காசநோயாளிகள் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி எடுத்துக்கூறினார்

காசநோயாளிகளின் வீட்டில் உள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனை கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்றுகூறினார்.

காசநோயாளிகளுக்கு  அரசு வழங்கும் உதவித்தொகை பற்றி பேசினார்

கூட்டத்தின் முடிவில் கோவில்பட்டி ரோட்டரி கிளப் மூலம் நோயாளிகளுக்கு இலவச சத்துணவு வழங்கபட்டது

இந்நிகழ்ச்சியில் காசநோயாளிகள் மற்றும் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் , சுகாதார பார்வையாளர் தெய்வராணி, ஆய்வகநுட்பணர் தனசெல்வி சோபியா ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

Wednesday, June 26, 2019

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள்!


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் கிராமப்புறங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் உட்பட அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரிந்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் தண்ணீர் லாரிகளுக்காக மக்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் குடிநீருக்காக தனியார் தண்ணீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில், ஏழை-எளிய மக்கள் குடிநீருக்காக சொல்லொன்னா துயரங்களை சந்திக்கின்றனர். பருவமழை பொய்ப்பை இந்த துயரத்துக்கு காரணமாக அரசு கூறினாலும், அரசின் மெத்தனமும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் முக்கிய காரணமாகும்.

இந்த சூழலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். ஏற்கனவே இந்த பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான விபரீத நிலைமையை புரிந்துகொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இன்னும் முழுமையாக தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

தேவையான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் விநியோகம் செய்வது, அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு பகுதி மக்களுக்கு தேவையான தண்ணீரை முறையாக கிடைக்கச் செய்வது, மழை பெய்தால் மழைநீரை தேக்கிவைப்பதற்கான, மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதுதொடர்பாக மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதோடு தண்ணீரை வீணாக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் துவக்க தினம் தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக இதுபோன்ற நடவடிக்கைகளையும் கட்சியின் நிர்வாகிகள் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். 


ஒரு கை இல்லமால் இந்தியா கால்பந்தாட்ட அணிக்கு தேர்வான இளைஞர்


தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் ராணி. இவருக்கு இரண்டு மகன்கள். கூலி வேலை செய்து இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார். இதில் ஒரு மகனுக்கு பாலமுருகன் (26) பிறக்கும்போதே ஒருகை இல்லை. கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுதியால் நன்பர்கள் மற்றும் குடும்பத்தினார் தூண்டுதாலில் பேரில் கால்பந்தாட்டத்தில் மாவட்ட, மாநில அணியில் இடம் பெற்று கோவாவில் நடைபெற்ற போட்டியில் இவர்களின் அணிஇரண்டாம் இடம் பிடித்தனார். நோபா ளத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி, தற்பொழுது ஜோர் Lன் நாட்டில் நடைபெரும் கால்பந்தாட்ட அணியில் இட பெற்றுள்ள பாலமுருகனுக்கு அங்கு செல்வதற்கான செலவுகளை கூலி வேலை செய்து கடன் வாங்கி அனுப்ப வேண்டும் என்று தாயார் கூறினார். மேலும் இந்தியா அணியில் இடம்பெற்ற பாலமுருகனுக்கு தேனி மாவட்ட கலாம் நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனார்

தேனி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்புவிழா


தேனி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்புவிழா கல்லூரியின் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும் , பொருளாளர் தாமரைக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தர்மலிங்கம் மாணவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முன்னேற்றம் குறித்தும், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இந்த விழாவில் கல்லூரி துணை செயலாளர் விஜயன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரி அணைத்து துறை ஆசிரியர்கள், மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மூலம் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இந்த முதலாம் ஆண்டு வரவேற்பு விழாவின் நிகழ்ச்சிகளின் நன்றியுரையை திட்ட அலுவலர்செல்வக்குமார் மற்றும் முதலாம் ஆண்டு அணைத்து துறை ஆசிரியர்கள் நிகழ்த்தினார்கள். மேலும் இந்த விழாவில் பாலி டெக்னிக்அனைத்து துறை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனார்

Monday, June 24, 2019

மேலப்பாளையத்தில் ஆறு ஆண்டுகளாக வீணாக சாக்கடைக்கு செல்லும் குடிநீர்




திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்க்கு உட்பட்ட நேருஜி சாலையில் (காவல் நிலையம் to பசீரப்ப பள்ளிவாசல் செல்லும் வழியில்) சாலை ஓரத்தில் உள்ள பொது நல்லியில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் சாக்கடையில் வீணாக கலக்கிறது.

இது சம்பந்தமாக அங்குள்ள பொது மக்களிடம் கேட்டதில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடிநீர் வீணாகுவதாக கூறுகின்றனர். தற்போது கோடை வெய்யிலின் காரணமாக பாபநாசம் அணை வரட்சியின் பிடியில் உள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இந்த சூழ்நிலையில் குடிநீர் வீணாக சாக்கடைக்கு செல்வதை பார்த்தால் வேதனையாக உள்ளது.

நகரின் முக்கிய வீதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடிநீர் வீணாகுவதை  மண்டல அலுவலர், ஒரே மண்டலத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் மண்டல செயற் பொறியாளர் ஆகியோர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்...

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுநீதி முகாம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுநீதி முகாம் இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற கோரிக்கை மனு முகாமில் மார்க்கையன் கோட்டை கிராமத்தினை சேர்ந்த குறவர் சமுதாய மக்களின் சார்பாக சமூக ஆர்வலர்  மணிவேல் மற்றும் குறவர் இனத்தினை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனார். அந்த கோரிக்கை மனுவில் தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை யில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். குறவர் இனமக்களான நாங்கள் இதுவரை நாடோடிகளாக அதுவும் கூடார வாசிகளாக வசித்து வருகிறோம். மார்க்கயன் கோட்டையில் உள்ள நெல் களத்தில் கூடாரம் போட்டு வசித்து வருகிறனர். தி டிரென்று கூடாரத்தினை காலி செய்யும் மாறு இடத்தின் உரிமையாளர்கள் கூறுவதாகவும், தற்போது அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் எங்கள் பிள்ளைகள் படித்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை மற்றும் அரசு ஆவணங்கள் முகவரிகளும் மார்க்க யன்கோட்டையில் உள்ளது என்றும் திடிரென்று இடத்தினை காலி செய்வதினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது என்றும் குழந்தைகளும், அங்கு உள்ள குடும்பத்தினை சேர்ந்த வருகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனார் என்றும் மாற்று இடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை அளித்துள்ளனார்

Sunday, June 23, 2019

வீட்டுக்கு ஒரு மரம் வளர் திட்டம், தூய்மை இலஞ்சி திட்டம், இலஞ்சி பகுதியில் மரக்கன்று தமிழ்நாடு இயற்க்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக நட பட்டது

தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும்தேனி அமைதி அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள்

 தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும்தேனி அமைதி அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள் தேனி அல்லிநகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இப்போட்டிகள்  மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையிலும், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் MK Mமுத்துராமலிங்கம் , இளையதலைமுறை இயக்குனார் M. மருத துரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இப்போட்டியினைதேனி அல்லிநகர காவல் நிலைய ஆய்வாளர்கள் சன்முக லட்சுமி, தெய்வம் , அமைதி அறக்கட்டளை இயக்குனர் M.அய்யப் பராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இப்போட்டிகளில்130ம் மேற்பட்டகல்லூரி பள்ளி மாணவர்கள்  கலந்து கொன்டு சிலாம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனார். இப்போட்டிகள் அனைத்தும் வயதின் அடிப்படையில் நடைபெற்றது.இப்போட்டிகளில் இளைய தலைமுறை நண்பர்கள், பசுமை தேனி நண்பர்கள், மழைத்துளி பவுண்டேசன் நண்பர்கள், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினார் ,வையை தமிழ் சங்க நண்பர்கள், சிறகுகள் ஆதரவற்றோர் காப்பகம், கலாம் நண்பர்கள், தேனி லெனின் அமைதி அறக்கட்டளை , லத்திகா பழமுதிர்சோலை ஆகிய அமைப்பினை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்ட ஏற்பாடுகள் செய்து வரவேற்புரைநிகழ்த்தினார்கள். இப்போட்டிகளை கான தேனி மற்றும் மற்ற மாவட்டங்களிலிருந்து சிலம்பாட்டகலைஞர்கள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார்


Saturday, June 22, 2019

முதலியார்பட்டி, பொட்டல்புதூர் பகுதிகளில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு பொட்டல்புதூர் மற்றும் முதலியார்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு மாவட்ட பொதுத்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது முன்னிலை வகித்தார், இதில்
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா,
தொகுதி துணைத் தலைவர் செய்யதுபாசில்,
தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ் ,
தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹீம்,
முதலியார்பட்டி நகர செயலாளர் ஜாகிர்உசேன்,
முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாஜாமைதீன்,
இரவணசமுத்திரம் கிளை தலைவர் அஷ்ரஃப்அலி,
இரவணசமுத்திரம் கிளை துணைத் தலைவர் ரவணை யூசுஃப்
பொட்டல்புதூர் நகர தலைவர் PS ஃபைசல்
நகர துணைத் தலைவர் முஹம்மது அலாவுத்தீன்
மற்றும் உறுப்பினர்கள் ஜாவித், ராஜா,  அஜ்மல் , செய்யது ஷா , முஹம்மது ஹுசைன், சதாம், லிட்டில் ஜெய்லானி, பூபாலன்   மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும் கொண்டாடினர்




கல்லிடைகுறிச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நகர அலுவலகம் திறப்பு





கல்லிடைகுறிச்சியில்  எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நகர அலுவலகம் திறப்பு
கல்லிடை குறிச்சி யில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு  கட்சியின் புதிய கல்லிடை நகர அலுவலகம் திறப்பு மற்றும்  கட்சிகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு அம்பை தொகுதி தலைவர் சுலைமான்  தலைமை வகித்தார், கல்லிடை குறிச்சி நகர தலைவர் சித்தீக் வரவேற்புறை நிகழ்தினார், தொகுதி செயலாளர்  அசனார், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுல்தான், முன்னிலை வகித்தனர்,
புதிய அலுவலகத்தை மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் திறந்து வைத்து கொடியேற்றினார் , இந்த நிகழ்ச்சியில் கல்லிடை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் மஜீத் சார், அம்பை பெரிய பள்ளி ஐமாத் தலைவர் தாவுத், வாழ்துறை வழங்கினார்கள், இந்த நிகழ்சியில்  ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா , செயலாளர் அஜீஸ், கல்லடை நகர துணை தலைவர் மசூத், பொருளாளர் அன்வர், நகர நிர்வாகிகள்இஸ்மாயில் சாகுல், பக்கிர், ராஜா உற்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர், இறுதியாக நகர செயலாளர் கலீல் நன்றிறரை ஆற்றினார்
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும், இனிப்பு வழங்கியும்  கொண்டாடினர்


தேனியில் உலக யோக தினத்தினை முன்னிட்டு இலவச இரத்த பரிசோதனை முகாம்


தேனி அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள சங்கர் மருத்துவமனையில் இரத்ததான தினம் மற்றும் உலக யோகா தினத்தினை முன்னிட்டு இலவச இரத்த பரிசோதனை , சர்க்கரை. பரிசோதனைசெய்ய பட்டது. மேலும் இப்பரிசோதனை முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு யோகாவினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், சர்க்கரை மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் சங்கரக்குமார் விளக்க உரையாற்றினார். இம்முகாமை சங்கர் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனார். இம்மு காமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனார்

தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம்




  தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 5 வதுசர்வதேச யோகா தினம் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் திரு தாமரைகண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த யோக பயிற்யினை தேனி சஹஜ யோக மையத்தின் பயிற்சியாளர் திருமதி அனிதா, திருமதி நாகலட்சுமி, திருமுத்துராமலிங்கம் ஆகியோர் யோக பயிற்சியினை மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். முன்னதாக நடைபெற்ற விழாவில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்டமேலாளர் முகமது பாருக், மேற்பார்வையாளர் வைரவன் , அரசு மருத்துவமணை ஆலோசகர் முத்துலட்சுமி, அந்தோனி பிரன்ஜீஸ்ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனார். இந்த யோக மற்றும் இரத்த தான விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்

நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம்



தேனி மாவட்டத்தில் யோகா தினம்' அனுசரிக்கப்பட்டது   மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  நேரு யுவகேந்திரா சார்பில்  போடி காமராஜர்வித்தியாலயம் உயர்நிலைப் பள்ளியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது  இந்த யோகா நிகழ்ச்சியில்  நேரு யுவகேந்திரா துணை இயக்குனர்  சுந்தர மகாலிங்கம்  ssi ஒருங்கிணைப்பாளர்  பாலசுப்பிரமணியம்  காமராஜர் வித்யாலயா பள்ளி  தலைமையாசிரியர்  உஷாஎல்லம்மாள்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில்  மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்  திலகவதி அவர்கள்  யோகா செய்முறை கருத்தரங்கை  தொடங்கி வைத்துதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தூய்மை பாரத விருதினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் அவர்கள்  கலந்துகொண்டு  சிறப்புரை ஆற்றினார்  மேலும்  இந்த யோகா நிகழ்ச்சியில்  சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டி  கனகராஜ் பாண்டியன் ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்  யோகா பயிற்சியினை  யோகா குரு  நந்தகோபால்  செல்வி  சொர்க்கம் மீனா  ஆகியோர்  மேற்கொண்டனர்  நிகழ்ச்சியின் நன்றியுரையினை  தேனி நேரு யுவகேந்திரா  கணக்காளர்  ஸ்ரீராம்பாபு  அவர்கள்  நிகழ்தினார். ... > >

தேனியில் சர்வதேச யோகா தினம்



ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளியின் முதல்வர் விஜயட்சுமி, செயலாளர் சென்பகவள்ளி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற யோக நிகழ்ச்சியில் யோக ஆசிரியை ராஜாமணி அவர்கள் மாணவர் களுக்கு  யோக பயிற்சியின் செயல் விளக்கத்தினை மேற்கொண்டார் மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா கீழ் செயல்படும் இளைஞர் மன்றங்கள் சார்பாக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது