Saturday, August 31, 2019

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர், மூஞ்சுறு மற்றும் பழங்கள் முதலிய பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சி கலை ஆசிரியர் கார்த்திஷ்வரி அவர்களால் நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் இப் பயிற்சியினை மேற்கொண்டனர்.






Friday, August 30, 2019

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலங்குளம் தொகுதி செயற்குழு கூட்டம்




எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலங்குளம் தொகுதி செயற்குழு கூட்டம்
நடைபெற்றது
தொகுதி தலைவர் பத்தி ஹாஜா அவர்கள் தலைமையில் 30/08/19  அன்று மாலை 06:30 மணியளவில் கட்சியின் முதலியார்பட்டி அலுவலகத்தில்  வைத்து நடைபெற்றது

தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார்கள்
 தொகுதி துணை தலைவர் செய்யது பாஸில்,  செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நெல்லை  மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1,தொகுதி இணை செயலாளராக முதலியார் பட்டி ஜாஹிர் உசேன் நியமிக்கப்பட்டார்

2. ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் போன்ற பகுதிகளில் பார்டி கன்வென்ஷன் நடத்த வேண்டும்

 3. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தொகுதியில் உள்ள இரவணசமுத்திரம் , முதலியார்பட்டி , பொட்டல்புதூர் , பள்ளக்கால் புதுக்குடியிருப்பு மற்றும் சம்பன்குளம் நகரம் சார்பாக போட்டியிடும் இடங்களில் பூத் கமிட்டி நியமனம்

4.  இரவணசமுத்திரம் பகுதியில் மகளீர் அணி சார்பாக தெருமுனை கூட்டம் நடத்துவது

5.இரவணசமுத்திரத்தில் நாளை மறுநாள்  ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள திப்புசுல்தான்விளையாட்டு  திடலை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர் களை அழைப்பது ,

6.காந்திநகரில் 30 ஆண்டுகளாக அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் உடனடியாக அரசு அமைத்து தரவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

செயற்குழு கூட்டத்தில்

முதலியார்பட்டி மேற்கு கிளை தலைவர் ஹாஜா மைதீன் (எ) ஹாஜி ,
பொட்டல்புதூர் நகரத் தலைவர் பி.எஸ்.பைசல் ,
பள்ளக்கால்புதுக்குடியிருப்பு நகரத் தலைவர் சேக் செய்யது அலி ,
பள்ளக்கால் நகர துணைத்தலைவர் செய்யது அலி , கலந்து கொண்டனர்.

இறுதியாக  இரவணசமுத்திரம் நகர செயலாளர் இரவணை உசேன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்




Wednesday, August 28, 2019

திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம்

www.nellaijustnow.com
திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறையில் பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் அதன் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர்
சிவ. சத்திய வள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும் மாணவ மாணவிகளுக்கு  எடுத்துரைத்தார்.
அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் பெருமைகளையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.


Monday, August 26, 2019

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்





நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பாக  வாகன காப்பீடு, மற்றும் வாகன
வரிகளை உயர்த்தி  ஏழை மோட்டார்
தொழிலார்களின் வயிற்றில் அடித்து மோட்டார் வாகன தொழிலை அழிக்கின்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்படி வாகன காப்பீடு. மற்றும் வாகன வரிகளை திரும்ப பெற கோரியும் , மோட்டார் வாகன தொழிலை காப்பாற்ற வலியுறுத்தியும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன் வரவேற்புறை நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அஜீத் ரஹ்மான். மாநில செயலாளர் சாந்து இப்றாஹிம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில்  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி  தொழிற்சங்க  மாவட்ட இணை செயலாளர் ஜாபர் சாதிக்
ஏர்வாடி சேக் இஸ்மாயில்  பாளை சிந்தா மற்றும் எஸ்.டி.டி.யூ உறுப்பினர்கள் 200 கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். மாநில பொது செயலாளர் அஜீத் ரகுமான் தனது உரையில் கூறியதாவது.பணமதிப்பு இழப்பீடு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற தவறான  பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகள்  மோடி அரசால்  கார்ப்ரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கபடுகிறது. டாடா, பிரிட்டானியா ,பார்லே போன்ற நிறுவனங்கள் அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தடுமாறுகிறது.  கார்ப்ரேட்களுக்கு ஆதரவான மோட்டார் வாகன சட்ட திருதங்களால்  மோட்டார் வாகன தொழில் அழியும் சூழல் உருவாகி உள்ளது. என கூறினார்.

சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்த முதியவரை மீட்டு மறுவாழ்வளித்த SDPI கட்சியினர் !



 நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆனை குளத்தை சேர்ந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் சாலையோரம் கவனிப்பாரற்று கிடந்ததை கவனித்த  அன்வர் சாதிக் என்பவர்  உடனடியாக SDPI கட்சியினருக்கு  தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த
#SDPI செயல்வீரர்கள், மற்றும் தமுமுக சகோதரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றுதிரன்டு, பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு சுத்தப்படுத்தி, காயங்களுக்கு மருந்து வைத்து காவல்துறை உதவியுடன் அருகிலுள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில்  செயல்படும் ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்த்தனர். ஆதரவற்ற முதியவரை மீட்டு தேவையான உதவிகளை செய்த சகோதரர்களின் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்...




திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி





திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில்  கயத்தார் ஒன்றிய அலுவலகத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் வரவேற்று பேசினார்.கயத்தார் மருத்துவ அலுவலர் திலகவதி,  மற்றும் கடம்பூர் மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை வகித்து பேசிய மாவட்ட காசநோய்த் துறையின் துணை இயக்குநர் மருத்துவர்.சுந்தரலிங்கலிங்கம்,  காசநோயை  ஒழிப்பதன் அவசியம் குறித்தும் காசநோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்

காசநோயின் அறிகுறிகள் மற்றும் கண்டுபிடிக்கும் முறைகளையும் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

 மேலும் காசநோயாளிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள அரசு  மாதம் தோறும் நோயாளிகள் வங்கிகணக்கில் செலுத்தி வரும் உதவி தொகை பற்றியும் காசநோயற்ற இந்தியாவை 2025 ல் உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.

 முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்

                இவ்விழாவில் கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் விஜயகுமார்,
தூத்துக்குடி மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, 
  அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

        இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் ஆகியோர்  செய்திருந்தனர்.

Sunday, August 25, 2019

தேசிய கண்தானவிழா மனிதசங்கிலி...

தேசிய கண்தானவிழாவை முன்னிட்டு நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன், டாக்டர். லயனல்ராஜ் கலந்துகொண்டனர்...

Thursday, August 22, 2019

எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் நெல்லையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.



மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக போராட அழைப்பு.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்.டி.டி.யூ )மாநில தலைவர் தஞ்சை பாருக் நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறியதாவது.  மத்திய அரசு கொண்டு வர உள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும். இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வலியுறுத்தியும்  போக்குவரத்து வாகன வரிகளை உயர்த்தி மோட்டார் தொழிலை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து

 வரும் ஆகஸ்ட் 27 எஸ்.டி.டி.யூ
நெல்லை மாவட்ட செயலாளர் பசீர்லால்
தலைமையில் நெல்லையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

 இதில் மாநில பொதுசெயலாளர் அஜீத் ரஹ்மான் கண்டன  உரையாற்ற உள்ளார்
இதில் தொழிளார்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

அதே போல மத்திய அரசின்   தவறான  பொருளாதார கொள்கையால்   பல மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடப்பட்டு  பல்லாயிரகணக்கான  தொழிலார்கள் வேலை இழக்கும்  அபாய சுழல் நிலவுகிறது.

 பிரிட்டானியா, பார்லி போன்ற அரை நூற்றாண்டை கடந்த நிறுவனங்களும்  மத்திய அரசின்   தவறான  பொருளாதார கொள்கையால்
தள்ளாடி வருகிறது.

 எனவே ஜி.எஸ்.டி. மோட்டார் வாகன சட்டம் போன்றவற்றில் உள்ள  குளறுபடிகளை சரி செய்யவேண்டும் என கூறினார்.

இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, எஸ்.டி.டி.யூ நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பசீர் லால் துணை தலைவர் கல்வத், பொருளாளர் மைதீன்,  செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை முஸ்தபா, திவான், பாளை சிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


தூத்துக்குடி காசநோய் துணை இயக்குநருக்கு தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருது*





தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருதை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் *டாக்டர்.சி.விஜயபாஸ்கர்* அவர்கள் வழங்கினார்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் மருத்துவ துறையில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (22.08.19) அன்று *தமிழ் நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில்* மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் *டாக்டர்.சி.விஜயபாஸ்கர்* அவர்கள் 2018ம் ஆண்டில். மருத்துவ துறையில் சிறந்த சேவை புரிந்த தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் கூறுகையில் 1995ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்து, அதை தொடர்ந்து 2002ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவக் கல்வியை முடித்தார். 2006ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தார்.  2008ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையத்தில் மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்து, 2015 ம் ஆண்டு துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருவதாக கூறினார்.  இந்த விருது தனக்கு கிடைத்ததன் மூலம் தமிழக அரசிற்கும், காசநோய் பணியாளர்களுக்கும். நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், 2025 க்குள் காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டம் உருவாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக 73வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்களால் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டமைகாக பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் *மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர்.பீலாராஜேஷ்,இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் திரு.கணேஷ்,இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டாக்டர்.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மருத்துவப் பணிகள் இயக்குநர் மரு.சுவாதி, பொது மருத்துவத் துறை இயக்குநர் மரு.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, August 21, 2019

தேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் கீழக்கூடலூர் மாநில அரசு விதைப்பண்ணையில் இயந்திர நெல் நடவு செய்வதற்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி

தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் அவர்களின் வழிகாட்டுதலின்படி வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர்  இளங்கோவன்  அவர்களின் அறிவுறைகளின்படி கம்பம் வட்டாரம் கீழக்கூடலூர் மாநில அரசு விதைப்பண்ணையில் இயந்திர நெல் நடவு செய்வதற்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் . வாழை.கரும்பு. திராட்சை . தக்காளி .பீட்ரூட்.நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நெல் சாகுபடி அதிகமாக செய்யப்படுகின்றன. நெல் சாகுபடியில் இன்னும் விவசாயிகள் பழைய நடவு முறையையே கடைபிடித்து நடவு நடப்படுவதால் நடவுக் கூலி. அதிக நீர் பயன்பாடு .அதிக கூலி ஆட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால்ஒரு ஏக்கருக்கு குறைந்த அளவே லாபம் ஈட்டப்படுகிறது. இதனால் விவசாயிகள் புதிய நெல் நடவு முறையான. திருந்திய இயந்திர நெல் நடவுசாகுபடி முறையால் .சாதாரண நடவு முறையைக் காட்டிலும் இரு மடங்கு விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயந்திர நெல்நடவு சாகுபடிமுறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில். விதை. பூச்சி மருந்து.நாடவுக்கான மானியம். களையெடுக்கும் கருவிக்கான மணியம்.நடவுத்தொளியை தயார் செய்வதற்க்கு மானியம் என ஏராளமான சலுகைகளை கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு  அவர்களின் ஆலோசணைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கம்பம். இது சம்மந்தமாக அப்பகுதி நெல் விவசாயிகளிடம் கேட்டபோது. பழைய முறையில் விவசாயம் செய்தால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் விதை மற்றும் இயந்திர நடவுமுறையால் இரு மடங்கு லாபம் கிடைக்கிறது என்றார்


அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அறிவியல்பூர்வமான வேலை ஒதுக்கீடு, பணியிட மாற்றத்தில் ஒருமித்த கொள்கை வகுத்தல், கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புதல், பதவி மறு சீரமைப்பால் மறுக்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் நிலவும் வேறுபாடுகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 01.08.2019 முதல் வருங்கால வைப்புநிதி அலுவலக ஊழியர்களால் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இன்று 21.08.2019 மதியம் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளன துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் ராஜேஷ்வர சிங், துணைச் செயலாளர் ஹரிஹரன், ஒருங்கிணைப்பு செயலாளர் சசிக்குமார், பொருளாளர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்...



Monday, August 19, 2019

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பதவியேற்பு.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் டாமோர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்...பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நெல்லை மாநககர பகுதியில் குற்றங்கள் குறித்த புகார்களை தனக்கு 9498199499 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்...

Sunday, August 18, 2019

திருத்தணி இளைஞர் கொலை வழக்கில் சிக்கியவர்கள்

திருத்தணி இளைஞர் கொலை வழக்கில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை. தமிழகத்தில் தொடரும் பாத்ரூம் வழுக்கலும் மாவுக்கட்டும்

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் இன்று அகாடமி வளாகத்தில் செஸ் போட்டி

73-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு தேனி  கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் இன்று அகாடமி வளாகத்தில் செஸ் போட்டி அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமையில்  நடந்தது தேனிரோட்டரி மெட்ரோ கிங்ஸ் செயலாளர் ஸ்ரீராமகுரு முன்னிலை வகித்தார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேனி K.S.K மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் N.வள்ளிராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொன்டு பரிசுகளை வழங்கினார் , மேலும்அகாடமியின் தலைவர் S. சையது மைதீன் வரவேற்றும் போட்டி ஏற்பாடுகளை அகாடமி இணைச் செயலாளர் S. அஜ்மல்கானும் தலைமை நடுவராக R. தேனழகன் ஆகியோர் செயல்பட்டனார். 10-வயது பிரிவில் வெற்றி பெற்றவர்கள் மாணவிகள் 1, S. ஆனந்தபிரியா,2,AG. சாத்விகவர்ஸா,3, J.சியோனிக்கா 4, J. மிருதுளா , 5 V. விஜயஸ்ரீ, மாணவர்கள் 1,AK.தரணிகரன் 2, S. ராம் சபரிஸ் 3. M. சந்துரு 4.N. திவாகர் 5. V. சந்தோஸ் 13-வயது பிரிவில் வெற்ற மாணவிகள் 1. M. பிரியதர்ஸினி 2.G. மோனிக்கா 3.S.தர்ஸனாஸ்ரீ ,4. PS. சகானா 5. N. அனிஸ தேஜ் அஸ்வினி . மாணவர்கள் 1.A.அல்பி டெரன்ஸ் ஜோஸ் 2.S. தருண் பாலாஜி 3.S.R.M தர்ஷன் 4. J. ரன்ஜெய்5.S. சன்ஜெய் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்றனார்.. இந்த விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவிகள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்.



Saturday, August 17, 2019

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 16 ஊராட்சிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இணைத்திட வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட சிறப்பு ஆணையரிடம் மனு...

இன்று திருநெல்வேலி மாவட்ட தோடு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் தாமிரபரணி ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள 16 ஊராட்சிகள் செய்துங்கநல்லூர் முத்தாலங்குறிச்சி விட்டிலாபுரம் ஆழிகுடி விட்டிலாபுரம் கோவில்பத்து முறப்பநாடு புதுகிராமம் முறப்பநாடு கோவில்பத்து கீழ புத்தனெரி வசவப்பபுரம் கருங்குளம் தாதன்குளம் வல்லகுளம் தெற்கு காரசேரி சேரகுளம் ராமானுஜம் புதூர்உள்ளிட்ட 16 ஊராட்சிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இணைத்திட வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட சிறப்பு ஆணையரிடம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் தாடி மாரியப்பன் நடராஜன் மதுபாலா சுடலைமணி முருகன் குண்டுமணி ஜான் விக்டர் உலக முத்து மாரியப்பன் பட்டுராஜ் சுந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

Thursday, August 15, 2019

சாராடக்கர் மகளிர் கல்லூரியில் 73 வது சுதந்திர தின விழா

125 வது வருட பாரம்பரியமிக்க  சாராடக்கர் மகளிர்  கல்லூரியில் 73 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.ஆக்கன் ப்ரின்சி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் பொறியாளர் பி. சாம்சன் பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.கல்லூரி முதல்வர் டாக்டர் உஷா காட்வின் பரிசுகளை வழங்கினார். துணை முதல்வர் டாக்டர்.ஜெபமலர் வின்செஸ் மணிமாலா  அவர்கள் சுதந்திர தின சிறப்பு செய்திகளை வழங்கினார். மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டார்கள். மாணவி செல்வின் ஆல்பின் நன்றியுரை ஆற்றினார். சுதந்திர தின விழா தேசிய பண்ணோடு இனிதே நிறைவு பெற்றது.