இந்த சூழலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். ஏற்கனவே இந்த பணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான விபரீத நிலைமையை புரிந்துகொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இன்னும் முழுமையாக தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
தேவையான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் விநியோகம் செய்வது, அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு பகுதி மக்களுக்கு தேவையான தண்ணீரை முறையாக கிடைக்கச் செய்வது, மழை பெய்தால் மழைநீரை தேக்கிவைப்பதற்கான, மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதுதொடர்பாக மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதோடு தண்ணீரை வீணாக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் துவக்க தினம் தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக இதுபோன்ற நடவடிக்கைகளையும் கட்சியின் நிர்வாகிகள் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment