மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதியான கரீம் நகரில் பெருநாள் காலை 7 :15 மணி அளவில் அல்மதீனா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது
பெருநாள் குத்பா உரையை - மவ்லவி K.S சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் நிகழ்தினார்கள்
மெளலவி மீரான் முஹைதீன் அன்வாரி பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்
இதில் மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாக கமிட்டி பொருளார் ஐவஹர் அலி,எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் கனி, மற்றும் மாவட்ட தொகுதி, பகுதி, வார்டு,நிர்வாகிகள் , லெப்பை, மின்னதுல்லாஹ், புஹாரி, ஜமாத்தார்கள், பெண்கள்,குழந்தைகள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் ஊடகவியாளர் சந்திப்பின் போது ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது;
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாள் தினம் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பசித்தோருக்கு உணவளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோதரத்துவத்தை நாம் மேலோங்கச் செய்திட வேண்டும்.
நாட்டில் மத, இனப் பிரிவுகளுக்கிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
தற்போது மத்தியில் மீண்டும் இந்துத்துவ பாசிச சக்திகள் ஆட்சிக்கட்டிலில் வலிமையாக அமர்ந்துள்ளன. இதனால் பாசிச சக்திகள் இன்னும் வேகமாக அதன் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும். சர்வாதிகார போக்கில் நாட்டு மக்களை வழிநடத்தும். அதன் காரணமாக சிறுபான்மை மக்கள் உள்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனினும் எப்படிப்பட்ட சர்வாதிகாரமாக இருந்தாலும் அது வலுவான மக்கள் எழுச்சியின் முன் வீழும் என்பதால், பாசிச சக்திகளின் சர்வாதிகாரத்தை துணிந்து எதிர்கொள்ள வேண்டும். பாசிச சக்திகளை வீழ்த்த தேர்தல் மட்டும் வழிமுறை அல்ல. பல்வேறு ஜனநாயக வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை தேடி நாம் ஒருங்கிணைய வேண்டும் என கூறினார்
No comments:
Post a Comment