Sunday, May 26, 2019

சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி






 நெல்லை கிழக்கு மாவட்டம் மானூர் நகரம்   சீதை குறிச்சியில் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மானூர் நகர எஸ்.டி.பி.ஐ  கட்சியின் சார்பாக, நகர தலைவர் அ.அன்வர்ஷா அவர்கள் தலைமையில்  சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, இந் நிகழ்ச்சியில் சீதை குறிச்சி ஜமாஅத் தலைவர் மஸ்தான், எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு பட்டி கிளை தலைவர் அஜ்மீர், மேற்கு பகுதி தலைவர் பைசல், குறிச்சி குளம் கிளை பொறுப்பாளர் இஸ்மாயில், ரெட்டியார் பட்டி கிளை பொறுப்பாளர் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் அம்பை பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் அலாவூதீன்,        முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கி துரை, சி.எஸ்.ஐ சர்ச் பாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்  மேலும் தெற்கு பட்டி தி.மு.க கிளை தலைவர் பீர், குறிச்சி குளம் முஸ்லிம் லீக் பொறுப்பாளர் நிஜாம், சீதை குறிச்சி தி.மு.க பொறுப்பாளர் மைதீன் மற்றும் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மானூர் நகர செயலாளர் ஹாலித் முகமது நன்றி கூறினார், மேலும் ஊர் பொது மக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

No comments:

Post a Comment