Wednesday, May 29, 2019

சுத்தமல்லியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சுத்தமல்லி பகுதியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 சுத்தமல்லி நகரம் சார்பாக நடைபெற்ற  நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நகர தலைவர்  பயாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், நெல்லை கிழக்கு மாவட்ட  செயற்குழு உறுப்பினர்  சேக் முகம்மது சாலி தலைமைதாங்கினார் சுத்தமல்லி காமில்,மஜீத், முன்னிலை வகித்தனர் ,
சிறப்பு அழைப்பாளர் களாக
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கனி ,மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா,மாவட்ட மருத்துவ சேவை அணி தலைவர் ஜெய்லானி,பொருளாளர் முபாரக் அலி
மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர்  மோத்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இலியாஸ் கலந்து கொண்டனர்
சமூக நல்லிணக்கம் குறித்து பேட்டை முஸ்தபா சிறப்புறை நிகழ்த்தினார்,ஜமாத்தார்கள் ,மற்றும்  மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் இறுதியில் சுத்தமல்லி வியாபாரிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் 
சுத்தமல்லி ரிபாய் நன்றி உறை ஆற்றினார் ....

No comments:

Post a Comment