"சாகித்ய அகாடமி விருது" பெற்ற, புகழ் பெற்ற நாவல் ஆசிரியரும், எழுத்தாளருமான "தோப்பில்" முகம்மது மீரான், இன்று (10-5-2019) வெள்ளிக்கிழமை அதிகாலை 1 -30 மணியளவில், திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை, "வீரபாகு நகர்", அவருடைய வீட்டில், காலமானார். அவருக்கு வயது 75. கன்னியாகுமரி மாவட்டம், "தேங்காய் பட்டணம்" என்னும், கடலோரக் கிராமத்தில் பிறந்த, "தோப்பில்" முகம்மது மீரான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திருநெல்வேலி யில் வசித்து வருகிறார். இவருடைய,"சாய்வு நாற்காலிகள்" என்ற நாவலுக்கு, 1997-ஆம் ஆண்டு, மத்திய அரசின், "சாகித்ய அகாடமி விருது " கிடைத்தது என்பது, குறிப்பித்தக்கது ஆகும். மறைந்த "தோப்பில்" முகம்மது மீரானுக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரின், "உடல் அடக்கம்", இன்று (10-5-2019) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, திருநெல்வேலி, ரகுமான் பேட்டை, ஜூம்மா மசூதியில், நடைபெறுகிறது.
No comments:
Post a Comment