Friday, May 10, 2019

நெல்லை அரசுஅருங்காட்சியகம் கோடைகால பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா நடைபெற்றது.




 நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால பயிற்சி முகாமில் இலவச ஓவிய பயிற்சி வகுப்பு  நடத்தப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருநெல்வேலி டீம்  டிரஸ்ட் நிறுவனமும் இணைந்து இலவச ஓவிய பயிற்சி வகுப்பினை நடத்தினர். ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.  ஓவியப் பயிற்சி  வகுப்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் ,மகளிர் என பலர்  இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.   ஓவியப் பயிற்சி  வகுப்பின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழாவில் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் ஆப் திருநெல்வேலி  டீம் டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமலை முருகன் மற்றும் தமிழ் செம்மல். கவிஞர். பேரா. ராஜேந்திரன் , கவிஞர். சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை  சிறப்பு விருந்தினர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். விழாவில் ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அருங்காட்சியகத்தில் அடுத்த வாரம் பேப்பர் சிற்பங்கள், சாக்பீஸ் சிற்பங்கள், செயற்கை இலை, செயற்கை மரம் தயாரித்தல்,பானை ஓவியம், ஜூட் சுவர் மாட்டி போன்ற பல்வேறு கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

No comments:

Post a Comment