Thursday, May 16, 2019

பேட்டை பகுதிகளில் மின்வாரியதால் ஏற்படும் குளறுபடி. நிவர்த்தி செய்ய எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை...

நெல்லை மாவட்டம்
பேட்டை பகுதியில் தமிழ்நாடு மின்சாரவாரிய பேட்டை அலுவலகத்திற்கு உட்பட்ட பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  மின் அளவீட்டை(ரீடிங்) எடுப்பதற்க்கு ஆள் வரவில்லை பொதுமக்களே குறித்து வாருங்கள்   என்று கூறுகின்றார்கள். பணம் செலுத்தும் இடத்திலும் போதுமான பணியாளர் இல்லாத காரணத்தால் பொது மக்கள் நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்று பணம் செலுத்த வேண்டியதாக உள்ளது.
பொதுமக்களே (ரீடிங்)மின் அளவை குறித்து வந்து பணம் கட்டுவவது சாத்தியமில்லாதது. அதிகமான சிரமத்திற்க்கு தள்ளபடுகின்றார்கள்.
ஆகையால் மக்களை சிரமத்தை போக்கும் வகையில் காலி பணியிடங்களுக்கு உடனடியாக பணியாரை நியமிக்க வேண்டும் என
நெல்லை  நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் முத்துகுட்டி அவர்களை சந்தித்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக்சாலி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஜெயலாணி மாவட்ட ஊடக பிரிவு ரியாஸ்
வார்ட் நிர்வாகி பீர்முஹம்மது  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment