அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் 3 பகுதியில் ரோந்து பணி 10/05/19 ம் தேதி மேற்கொள்ளும் போது சுமார் இரண்டு வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று தலையணக்கு மேல் உள்ள பாறைப் பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துபோய் உருக்குழைந்து, உள்பாகங்கள் சிதைந்து கிடப்பது கண்டறியப்பட்டது.அதனை துணை இயக்குநர்/வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தலின்படி 11/05/19 அன்று வன கால்நடை மருத்துவர் அவர்களால்பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்பு வன கால்நடை மருத்துவர்,வனச்சரக அலுவலர், வனவர், வனப்பணியாளர்கள்,கிராம வனக் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.
No comments:
Post a Comment