மதுரை: மதுரை டி.பி.கே. பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது சென்னையை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் போலீசார் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். போலீசார் நடத்திய விசாரணையில் பலியான நான்கு பேர்களில் தல்லாகுளம் போக்குவரத்துப்பிரிவு போலீஸ் ஜோதி அவரது உறவினர் சத்தியவாணி மற்றும் அவரது மகள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment