Saturday, May 18, 2019

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி ஒரு சகாப்தம் சிறப்பு புகைப்பட கண்காட்சி துவங்கப்பட்டது .

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்   சிறப்பு புகைப்பட கண்காட்சி துவங்கப்பட்டது .



கண்காட்சியினை பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் துவங்கி வைத்தார் . அவருடன் விவேகானந்தா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் தர்ம ரஜினி ,லயன்ஸ் கிளப் ஆஃப் திருநெல்வேலியின் தலைவர் லயன் திருமலை முருகன், சுரேஷ் அஸ்வின் ஆகியோர் உடன் இருந்தனர். அக்கண்காட்சியில் மகாத்மா காந்தியின் இளம் வயது முதல் அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களாக நடந்த நிகழ்வுகள் பற்றிய அறிய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயங்களின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட  அரிய புகைப்படங்கள் கொண்ட இக்கண்காட்சியினை பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டார். மகாத்மா காந்தியின் புகைப்பட கண்காட்சியை துவங்கி வைத்தது தனக்கு கிடைத்த ஒரு அரிய பாக்கியம் என்று தெரிவித்தார். மேலும் அருங்காட்சியக காப்பாட்சியரின் சேவையினைப் பாராட்டி தன் வசம் உள்ள அரிய பல பொருட்களில் சிலவற்றை அருங்காட்சியகத்து க்கு  அன்பளிப்பாக தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் . அதனைத் தொடர்ந்து அரிய தபால் தலைகள் மற்றும் முதல்நாள் தபால் உரைகளின் கண்காட்சியினை ரோட்டரி sub hurbs சபாவின் தலைவர் வடிவேல் துவங்கி வைத்தார் .அக்கா கண்காட்சியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முற்பட்ட பழைய தபால் தலைகள் மற்றும் முதல் நாள் தபால் உறைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. வக்கீல் பிரபாகரன், ஜமால் முஹம்மது ஈஷா ,அந்தோணி குரூஸ் ,சங்கரன் , ஆறுமுகம், முத்து மணி ஆகியோர் உடனிருந்தனர். அருங்காட்சியகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பாராட்டி திருநெல்வேலி sub hurbs சங்கத்தின் சார்பாக அருங்காட்சியகத்திற்கு 10 பிளாஸ்டிக் நாற்காலிகளும் இரண்டு குப்பை தொட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சென்ற வாரம் நடைபெற்ற கலைப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கைவினை பயிற்சி பெற்ற மகளிருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கைவினை கலைஞர் அடையாள அட்டை வழங்கப்பட்டது மாணவி சயாலி அஷ்லி குயின் என்பவரது ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது இந்த அரிய கண்காட்சிகளை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

No comments:

Post a Comment