Thursday, August 8, 2019

தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடியில் தேசிய குடற்புலு நீக்க முகாம்





தேசிய குடற் புலு நீக்க நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்றுப் புலுவை நீக்கும் *அல்பண்டசோல்* மாத்திரை மொத்தம் 506806 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களின் ஆலோசனையின்படி வழங்கப்பட்டது.

இம்மாத்திரை வழங்கும் முகாம் இன்று 8.8.19 கீழசெக்காரகுடி அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.கீதா ராணி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்  திருமதி.கிளாரா அமுத ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

முகாமில் 733 பேருக்கு குடற்புலு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

இம்முகாமில் திட்ட மேலாளர் டாக்டர்.கன்னியம்மள், செக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பன்னீர் செல்வம், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் திரு.வடிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.பெரியசாமி, சுகாதார ஆய்வாளர் திரு.முத்துகுமார், கிராம சுகாதார செவிலியர் திருமதி.நிர்மலா தேவி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment