Tuesday, August 6, 2019

தென்காசியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.


   வளர்ந்த நகரின் ஒன்றான தென்காசியில் தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனை நிரந்தரமாக தீர்வு எடுக்க வேண்டும் என எண்ணிய காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளர் ஐயா,ஆடிவேல் , உதவி ஆய்வாளர் மேரி ஞான ரூபி நகரில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், வணிகர்கள் , தனியார் வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி சில தீர்மானங்களை அனைவரின் சம்மதத்துடன் நிறைவேற்றினார்.
    வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
 கடைகளின் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக பொருட்கள் வைக்க கூடாது.
 இரு சக்கர வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும்
 கடையின் விளம்பர போர்டுகள் போக்குவரத்திற்கு இடையூராக வைக்க கூடாது.
 சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகருக்குள் வர வேண்டும்.
 வாகன ஓட்டிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு வழிப் பாதையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
விதிகளை மீறும் வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொது மக்களும் வணிகர்களும் முழு ஆதரவு தருவாத உறுதியளித்தனர்.

No comments:

Post a Comment