Thursday, August 22, 2019

தூத்துக்குடி காசநோய் துணை இயக்குநருக்கு தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருது*





தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்களுக்கு தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருதை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் *டாக்டர்.சி.விஜயபாஸ்கர்* அவர்கள் வழங்கினார்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் மருத்துவ துறையில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (22.08.19) அன்று *தமிழ் நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில்* மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் *டாக்டர்.சி.விஜயபாஸ்கர்* அவர்கள் 2018ம் ஆண்டில். மருத்துவ துறையில் சிறந்த சேவை புரிந்த தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் கூறுகையில் 1995ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்து, அதை தொடர்ந்து 2002ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவக் கல்வியை முடித்தார். 2006ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தார்.  2008ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையத்தில் மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்து, 2015 ம் ஆண்டு துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருவதாக கூறினார்.  இந்த விருது தனக்கு கிடைத்ததன் மூலம் தமிழக அரசிற்கும், காசநோய் பணியாளர்களுக்கும். நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், 2025 க்குள் காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டம் உருவாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக 73வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்களால் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டமைகாக பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் *மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர்.பீலாராஜேஷ்,இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் திரு.கணேஷ்,இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டாக்டர்.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மருத்துவப் பணிகள் இயக்குநர் மரு.சுவாதி, பொது மருத்துவத் துறை இயக்குநர் மரு.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment