Monday, August 26, 2019

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி





திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், தூத்துக்குடி மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில்  கயத்தார் ஒன்றிய அலுவலகத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் வரவேற்று பேசினார்.கயத்தார் மருத்துவ அலுவலர் திலகவதி,  மற்றும் கடம்பூர் மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை வகித்து பேசிய மாவட்ட காசநோய்த் துறையின் துணை இயக்குநர் மருத்துவர்.சுந்தரலிங்கலிங்கம்,  காசநோயை  ஒழிப்பதன் அவசியம் குறித்தும் காசநோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்

காசநோயின் அறிகுறிகள் மற்றும் கண்டுபிடிக்கும் முறைகளையும் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

 மேலும் காசநோயாளிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள அரசு  மாதம் தோறும் நோயாளிகள் வங்கிகணக்கில் செலுத்தி வரும் உதவி தொகை பற்றியும் காசநோயற்ற இந்தியாவை 2025 ல் உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.

 முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்

                இவ்விழாவில் கயத்தார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் விஜயகுமார்,
தூத்துக்குடி மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, 
  அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

        இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கு.காசிவிஸ்வநாதன் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் ஆகியோர்  செய்திருந்தனர்.

No comments:

Post a Comment