Sunday, August 11, 2019

மேலப்பாளையம் கரீம்நகரில் ஹஜ் பெருநாள் திடல்தொழுகை நடைபெற்றது




மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதியான கரீம் நகரில் பெருநாள்  காலை 7
மணி அளவில் அல்மதீனா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது

பெருநாள் குத்பா உரையை - மவ்லவி  K.S சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் நிகழ்தினார்கள்

மெளலவி மீரான் முஹைதீன் அன்வாரி பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்
இதில்  மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாக கமிட்டி பொருளார் ஐவஹர் அலி,எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் கனி, மற்றும் மாவட்ட தொகுதி, பகுதி, வார்டு,நிர்வாகிகள் , லெப்பை, மின்னதுல்லாஹ், புஹாரி, ஜமாத்தார்கள், பெண்கள்,குழந்தைகள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் ஊடகவியாளர் சந்திப்பின் போது  ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்  கூறியதாவது;

தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படும் இந்நன்னாள் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை நமக்கு உணர்த்துகிறது. மேலும், இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தையும் பறைசாற்றும் நாளாக உள்ளது. அதுமட்டுமின்றி பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாளாகவும், சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதையும் உணர்த்துகின்ற நாளாகவும் தியாகத் திருநாள் அமைந்துள்ளது.

அராஜக, சர்வாதிகார கொடுங்கோலர்களிடமிருந்து மக்களை பாதுகாத்து உண்மை தழைத்திட பாடுபட வேண்டும் என்பதும் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் அன்றைய சர்வாதிகாரி நம்ரூதுக்கு எதிரான துணிவுமிக்க போராட்டங்கள் மூலம் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றது.

ஆகவே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் இடர்படுகிற சோதனைகளை எல்லாம் தாங்கி, பாசிச சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை பாதுகாக்கவும், மக்களிடையே அன்பும், சமாதானமும் தழைத்திடவும், ஜனநாயகம் ஓங்கிடவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும் தியாகங்கள் பல செய்திட நாம்  சபதமேற்போம் இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.









No comments:

Post a Comment