Tuesday, August 6, 2019

தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்றது.

 



தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின்  சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்றது. விழாவில் கிருஷ்ணா ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா நடன இசைப்பள்ளி நிர்வாகியும்  பாட்டு ஆசிரியராகுமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய  ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம்  பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சாஸ்திர முறைப்படி  பரத நாட்டியத்தை துவக்கிவைத்தனர் .ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா நடன இசைப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி குழந்தைகளுக்கு இக்கலையினை கற்று கொடுத்து வருகின்றனர் . மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இலவசமாகவும் கற்று கொடுக்கின்றனர் . இப்பரத நாட்டிய பள்ளியில் பயின்ற 36 மாணவிகள் சிதம்பரத்தில் நடைபெற்ற கின்னஸ் சாதனையாளர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கின்னஸ்  புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள்ஏராள மனோர் கலந்து கொண்டனார்

No comments:

Post a Comment