Thursday, August 15, 2019

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள்


         ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் துார்ந்து போன நீராதாரங்களை மீட்டெடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி ஒன்றிய கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
      தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெங்கசமுத்திரம், ராஜகோபாலன் பட்டி, எஸ்.எஸ்.புரம் ,பிச்சம்பட்டி,
கன்னியப்பபிள்ளைபட்டி, ராமகிருஷ்ணாபுரம் , தெப்பம்பட்டி, பாலக்கோம்பை,  மரிக்குண்டு,  மொட்டனூத்து,   என  மொத்தம் 30 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.         பருவமழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுவதால், பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ,மக்களின் பங்களிப்போடு அந்தந்த கிராமங்களில் உள்ள குளம் ,ஊரணி ஆகியவற்றை அரசு விதிகளுக்கு உட்பட்டு தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ரெங்கசமுத்திரம் ஊராட்சி ஜம்புலிபுத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் தண்டபாணி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தூர்ந்து போய் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை மீட்டெடுக்கும் வகையில் சுத்தம் செய்து ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டம், சாக்கடை, கால்வாய்களை சுத்தம் செய்தல், மரங்களை நடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், சேட பட்டி -ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்டுள்ள சத்யாநகர், காலனி, காந்திநகர், பாப்பம்மாள்புரத்திற்கு குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் மார்க்கண்டன்,  சக்கரவர்த்தி, ராஜேஷ்,   விஜயன், பிச்சைமணி , தயாளன், ராஜா, ஜோதிபாசு , வீராச்சாமி ,சுஜிதா உள்பட ஊராட்சி செயலர்கள் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

  

1 comment:

  1. Baccarat – Your Ultimate Guide to Playing Baccarat
    Baccarat is a high-stakes 메리트 카지노 game of chance and one of the most important elements septcasino of gambling. A high roller is simply choosing one of a number of 바카라 사이트 bets that

    ReplyDelete