Saturday, August 3, 2019

நெல்லை அரசு அருங்காட்சியகமும் எப்சிபா அறக்கட்டளை சென்னையும் இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பண்பாட்டு செல்வங்கள் பாதுகாப்பு ஓர் அறிமுகம் என்கிற தலை

நெல்லை அரசு அருங்காட்சியகமும் எப்சிபா அறக்கட்டளை சென்னையும் இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பண்பாட்டு செல்வங்கள் பாதுகாப்பு ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் என்று நடத்தினர் அரங்கத்தில் காப்பாற்றிய சிவ சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார் ஹெப்சிபா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் முனைவர் வே ஜெயராஜ் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்களை பாதுகாப்பது தொடர்பான செய்முறை வகுப்பினை நடத்தினார் அப்பயிற்சியில் அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் , மர சிற்பங்கள், உலோகப் பொருள்கள், ஓலைச்சுவடிகள் , தோல் பொம்மைகள் ஆகியவற்றை வேதியல் முறைப்படி பாதுகாக்கும் பயிற்சி வகுப்பினை நடத்தினார் .அவரைத் தொடர்ந்து போட்டோ சைலம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் ரங்கநாதன் அவர்கள் ஆவணங்கள் பாதுகாப்பு தொடர்பான செய்முறை வகுப்பினை நடத்தி காட்டினார். இப்பயிற்சியில் நெல்லை சேவியர் கல்லூரியில் வேதியியல் பிரிவு மாணவ மாணவிகளும் , தூத்துக்குடி புனித மேரி கல்லூரி வரலாற்றுத் துறை மாணவிகளும், சாத்தூர் srnm கல்லூரி மாணவர்களும் மொத்தம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.



No comments:

Post a Comment