Monday, July 8, 2019

பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ கட்சி மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை..





எஸ்.டி.பி.ஐ  கட்சி யின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்  அமைப்பின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் பாளை பர்கிட்மாநகரில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து   கொண்டு   கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் ஏராளமான பெண்கள்   ஆர்வமுடன் இணைந்தனர். விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்யின் நெல்லை கிழக்கு
மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா கலந்து கொண்டு பெண்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
பர்கிட் அலாவுதீன், பர்கிட்மாநகரம் கிளை தலைவர் சுபைர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.முடிவில் விம் மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா நன்றியுரை நிகழ்த்தினார்.


No comments:

Post a Comment