Thursday, July 11, 2019

மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மேலப்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் மர்மகய்சல் மரணம் குறித்து தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது






மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக  ஒருங்கிணைப்பாளர் கே. எஸ். சாகுல் ஹமீது உஸ்மானி  தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை  நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் மேலப்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் மர்மகாய்சல் மரணம் குறித்து
அவர் களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மன்டலத்தால் மேலப்பாளையம் பகுதி சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரால்
சில மாதங்களில் நூற்றுக்கணக்கான இறப்பும், மர்ம காய்ச்சல்,மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகிறது.
இதற்கான காரணம் குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை கழந்து வரும் குடிநீர்,
ஆதாரமாக மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட சில தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரை  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வக  கூடத்தில் கொடுத்து ஆய்வு செய்ததில் குடிநீர் தோற்றுநோய் கிருமிகள், இரும்பு துகள்கள் அதிகம் உள்ளதாக அறிக்கை வந்தது
ஆகவே பொதுமக்கள் சுகாதார மான குடிநீர் பெற்று நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ அதிகம் இறப்புகள் தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள்
மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் ஜமாத்கள் தலைவர்களை அழைத்து  உரிய ஆலோசனை பெற்று போர்காள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்

2)மேலப்பாளையம் கன்னிமார்குளத்தில் கலக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவு நீர் ஓடைகளை மாற்றுப்பாதையில் செலுத்தி கன்னிமார்குளத்தினை காக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உறிய நடவடிக்கை எடுக்க ஆனையிட வேண்டுகிறோம்
3)பாளையங்கால்வாயில் கலக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் ஓடைகளை மாற்றுப்பாதையில் திருப்பி பாளையங்கால்வாயினை காக்கவும்
பசுமை பாளையங்கோட்டை யாக மாற்றிட வேண்டுகிறோம்


இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி, தொகுதி இணை செயலாளர் புகாரிசேட் ,தி.மு.க மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கய்யூம் ,33வது தி.மு.க  வட்ட செயலாளர் சேக் மைதீன், சி.பி.ஐ நிர்வாகிகள் தோழர்கள் ஷாஜஹான் , பீர், மன்சூர்,இலைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆசாத் பாஷா,த.மு.மு.க நிர்வாகி கனி, இந்திய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி தொழில் அதிபர் முகமது ஹனீபா
நுகர்வோர் கண்காணிப்பகம் சங்கம் பொறியாளர் அப்துல் முத்தலிப் , பொறியாளர் காஜா  உடன் இருந்தனர்

No comments:

Post a Comment