இளைய தலைமுறை மற்றும் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பின் சார்பாக நமது முன்னாள் ஜனாதிபதி ஏவுகனை நாயகன், இளைஞர்களின் கனவு நாயகன் DR.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி நேரு சிலை பின்புறம் கலாம் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பாரதத்தினை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறையின் இயக்குநர்
M.K.மருத துரை, செயலாளர் M.அய்யப்பராஜன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன்,மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் ,நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த கையொழுத்து விழிப்புணர்வை தலைமையேற்று துவக்கி வைத்ததேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் MKM.முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்.,தனது முதல் கையெழுத்தை பதிவு செய்து நிகழ்வினை தேனி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ்அவர்கள் சிறப்புறை ஆற்றி சிறப்பித்தனர்..மேலும் அனைத்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள் , மற்றும்
பொதுமக்கள்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment