Friday, July 5, 2019

பொட்டல் புதூரில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பொதுக்கூட்டம்...






எஸ்.டி.பி.ஐ.கட்சி 11வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளம் தொகுதி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது
முதலாவது பொட்டல் புதூர் மேலபேருந்து நிலையம் அருகில் கட்சியின் கொடியை மாநில பொதுச் செயலாளர் அச.உமர்பாருக் ஏற்றினார்
தொடர்ந்து பொட்டல் புதூர் தீப அலங்கார திடலில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்தி காஜா தலைமை தாங்கினார்
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்
எஸ்.எஸ்.அப்துல்கனி, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், ஆலங்குளம் தொகுதி துணை தலைவர் செய்யது பாசில், தொகுதி பொருளாளர் துரைமுன்னா இபுராஹிம் , ஆகியோர்
முன்னிலை வகித்தனர்,
தொகுதி செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்
 மாநில பொதுச் செயலாளர் அ.ச.உமர்பாருக், மாநில செயலாளர் அகமது நவவி ,பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர், நேஷனல் விமன் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஆலிமா,
அய்யா தர்மயுக வழிப்பேரவை
நிறுவன தலைவர் பாலமுருகன், சிறப்புரை ஆற்றினார்கள், பொதுக்கூட்டம் மேடையில்  பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன , மேடையில் கஜாபுயலில் மீட்பு பணியில் ஈடுபட்ட கட்சியின் செயல் வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் ,
பொதுகூட்டத்தில்
முதலியார் பட்டி நகர தலைவர் பாசுல் அஷ்ரப்,
பொட்டல் புதூர் நகர தலைவர் பி.எஸ்.பைசல்,
ரவணசமுத்திரம் நகர தலைவர் அஷ்ரப் அலி, முதலியார் பட்டி நகர செயலாளர் ஜாகிர் உசேன், பொட்டல் புதூர் நகர செயலாளர் உசேன், ரவணசமுத்திரம்
நகர செயலாளர் உசேன்
விமன் இந்தியா மாவட்ட செயலாளர் ரினோஷா
மற்றும் ஜமாத்தார்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
இறுதியாக பொட்டல் புதூர் நகர செயலாளர் முகம்மது அலாவுதீன் நன்றி உரை ஆற்றினார்

No comments:

Post a Comment