இந்த போட்டியில் பதினேழு,பதினெட்டு வயது உள்ளவர்களுக்கும், பெண்களுக்குமான தனிப்பிரிவு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மினி மராத்தான் போட்டியினை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மாரத்தான் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் 19 வயது உள்ளவர்களுக்கு ஐந்து கிலோ மீட்டரும், 17 வயதுள்ளோருக்குக்கு நான்கு கிலோ மீட்டரும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி மூன்று கிலோ மீட்டரும் நடத்தப்பட்டது.இந்த மினி மாரத்தான் போட்டியில் 600 பேர் கலந்து கொண்டனர்.
17 வயதுக்கு உட்பட்டவர்கள் மினி மாரத்தான் போட்டியில் 4 கிலோமீட்டர் வரை நடத்தப்பட்ட போட்டியில் பி.ஸ்ரீராம் முதல் பரிசும், பாலகுருநாதன் இரண்டாம் பரிசும், மதன் மூன்றாம் பரிசும் பெற்றனார்.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் எம்.பெருமாள் முதல் பரிசும் ,விக்னேஸ்வரன் இரண்டாம் பரிசும் மனோஜ்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனார். பெண்களுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில்
கனிஷ்கர்கனி முதல் பரிசும் ராஜமதுமிதா இரண்டாம் பரிசும், தீபா ராணி மூன்றாம் பரிசும் பெற்றனார்.மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ 5,000 ரூபாய் ரொக்கப் பணமும்,, இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் ,மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூபாய் இரண்டாமிடமும்,அதன் பின் வந்த மூன்று பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு டீசர்ட் வழங்கப்பட்டது. பரிசுகளை தலைவர் முருகன் பொருளாளர் பழனிச்சாமி,
உபதலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். பின்பு நடைபெற்ற மாணவர்களின் காமராஜர் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் அணைகள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் மதிய உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் வாகன ஊர்வலமும்மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட ஊர்வலமும் பள்ளியில் தொடங்கி தேனி நேரு சிலைவழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பள்ளியை வந்தடைந்தனர் பின்பு நாடார் சரஸ்வதி பள்ளியில் ரத்ததான முகாமினைதேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் அந்த ரத்ததான முகாமில் காமராஜரின் பேத்தி கமலிகா அவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தார். அந்த பள்ளியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் அரசு ஊழியர்கள் காவல்துறை சமூக ஆர்வலர்கள் சுமார் 400 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார்கள் ரத்த தானம் செய்த அனைவருக்கும் மரக்கன்றுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து நாடார் சரஸ்வதி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு பள்ளி நிர்வாகிகள் .அரசியல் தலைவர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment