திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகின்சார்பில் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது
பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி வரவேற்று பேசினார்.
முகாமிற்கு கழுகுமலை நிலையமருத்துவ அலுவலர் பாப்பு தலைமை வகித்து பேசியதாவது
காசநோயாளிகள் அவர்களின் எடைக்கு தகுந்தவாறு மாத்திரை உட்கொள்ளும் முறைபற்றி எடுத்து கூறினார் , காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காசநோய் கண்டறியும் அவசியம் பற்றி கூறினார்.
மருத்துவர் விஷ்ணுவர்தன் காசநோய் அறிகுறிகள் பற்றி பேசினார்.
இம் முகாமிற்கு கிராம சுகாதார செவிலியர்கள், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மற்றும் காசநோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இம் முகாமை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்
No comments:
Post a Comment