Friday, July 12, 2019

“தூய்மை இந்தியா இயக்கம்” சிறப்பு விழிப்புணர்வு முகாம்







இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம்” சிறப்பு விழிப்புணர்வு முகாம் பாளையங்கோட்டை பர்கிட்மாநகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி என்பது அரசு முயற்ச்சி மட்டும் அடங்கியது அல்ல ஒவ்வொரு தனிமனிதனும் இத்திட்டத்தில் கைகொர்த்தால் மட்டுமே வெற்றி நிற்றயம் என்றார். மேலும் பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் அதனுடைய தீமைகள் குறித்தும் நாம் முழுமையாக தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்றார். மேலும் மக்கள் சுயஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பர்கிட்மாநகர் அரசு ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர் ராமலதா தூய்மை இந்தியா திட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு குறித்தும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்தும் அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் உரையாற்றினார். தமிழ்நாடு கிராம வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் திரு.மகாலிங்கம் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில்  மாவட்ட தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், உதவி செயற் பொறியாளர் ஆழ்வார், வட்டார தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் சுதா, ஆராய்ச்சி செயல் திட்ட சுகாதார ஆய்வாளர் முத்துராமன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஷாஹ{ல் ஹமீது, ஜெஸ்லின் கனக இன்பா, ஜெமி மெர்லின் ராணி மற்றும் ரம்யா கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள்  கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள்  பங்குபெற்ற பேரணியை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ் கொடி அசைத்து துவங்கி வைத்தார். மேலும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள் பர்கிட்மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கோடங்கி கலைக்குழுவினரின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் துய்மை மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது.



No comments:

Post a Comment