Monday, July 15, 2019

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.





    ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மொக்கராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் கண்ணன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட பொதுசெயலாளர் முருகன், தேனி ஒன்றிய தலைவர் திலகராஜ் நிர்வாகிகள் கார்த்திக், நாகராஜ், ரவி, முனீஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ஆண்டிபட்டமாவூற்று வேலப்பர் கோவில் கும்பாபிசேகத்தை நடத்த வேண்டும். இந்து கோவில்களில் தரிசன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.கூட்டத்தில் தேனி மாவட்ட அன்னையர் அணி, ஆட்டோ டிரைவர்கள் அணி உள்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment