*
மேலப்பாளையத்தின் மிக முக்கிய சாலைகளில் தற்போது ரெட்டியார்பட்டி சாலையும் ஒன்றாக இருந்து வருகிறது. மேலப்பாளையம் நகரின் விரிவாக்க பகுதியான இந்த சாலையில் தான் பல்வேறு குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், நிறைய உள்ளன.
இந்த பிரதான சாலையே மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர், 80 அடி அகலம் கொண்ட இந்த *ரெட்டியார்பட்டி சாலை தற்போது அதன் ஆரம்ப பகுதியான சந்தை பகுதியிலேயே தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு* தற்போது *இந்த சாலை 40 அடியாக சுருங்கி விட்டது,*
இது மட்டுமல்லாமல் ஆங்காங்கே கட்டிட கழிவுகளும் சாலையை ஆக்கிரமித்துள்ளது. அதுவும் *தாய் நகர் பூங்கா அருகே கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகள் மற்றும் கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.*
மாநகராட்சி சட்டப்படி பொது இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டினால் அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இருந்தும் இது வரை நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது என்று பொது மக்கள் கூறுகின்றார்கள்...
இன்று தினகரன் பத்திரிகையில் வெளியான மாநகராட்சி செய்தி குறிப்பில், சாலையோரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், *மேலப்பாளையம் மண்டல உதவி செயற் பொறியாளர் ரெட்டியார்பட்டி சாலையில் கட்டிட கழிவுகளை சேமித்து வைத்தவர் மீது நடவடிக்கை எடுப்பாரா ???

No comments:
Post a Comment