Friday, June 21, 2019

மூலைக்கரைபட்டியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவிகளுக்கு 1 லட்சம் மதிப்புள்ளசீருடை வழங்கும் நிகழ்ச்சி.



எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு  கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட வழக்கும் நிகழ்ச்சி நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரி தொகுதி  மூலைக்கரைப்பட்டி நகரம் சார்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் தலைமை தாங்கினார்.
மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவில் நகர பொருளாளர் பாருக் அவர்களும் ,புது தெருவில்  நகர செயளாலர் சேக். பேருந்து நிறுத்தம் அருகே நகர துணை தலைவர் முஹம்மது அலி ஆகியோர் கட்சி கொடி ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவங்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு   160 பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி,  மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது,
நான்குநேரி தொகுதி தலைவர் இம்ரான் அலி,
பாப்புலர் ப்ரண்ட் நாங்குநேரி டிவிசன் தலைவர் ஷாம் சாகப்தீன் ,
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் ,
மூலைக்கரைபட்டி காவல் உதவி ஆய்வாளர் துரை ,
அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம்,
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமார் , ஜமாத் நிர்வாகி சேக் அப்துல் காதர்,
விமன்ஸ் இந்திய மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா,
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மூலைக்கரைப்பட்டி நகர தலைவர் நிஜாம் உள்ளிடோர் உட்பட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவுகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கட்சியின் நகர இணை செயலாளர் பீர்மைதீன்  நன்றியுரை கூறினார்











ஆலங்குளம் பசுமை இயக்க நலத்திட்ட உதவி


ஆலங்குளம் பசுமை இயக்கம் மூலமாக அமெரிக்கா வாழ் மருத்துவர் சுரேஷ்குமார் சார்பில் நெல்லை பொதிகை நகர் புனித அன்னாள் உடல் ஊமைுற்றோர் இல்ல குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிளான பள்ளி புத்தக பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான், பாபு செல்வா, ராஜ், சார்லஸ், இளந்தளிர் அமைப்பு திலகராஜ், ராஜா, புனித அன்னாள் இல்ல அருட்சகோதரி விக்டோரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்










பாளை தீயணைப்பு நிலையத்தில் சர்வதேச யோகா தினம்,..

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாளையம்கோட்டை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் அனைத்து பணியாளர்களுக்கும் யோகா பயிற்சியளிக்கப்பட்டது...


Thursday, June 20, 2019

தேனி கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம்

தேனி அருகே கம்மவர் பாலி டெக்னிக் கல்லூரியில் உலக ரத்த தானத்தினை முன்னிட் டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் இரத்த தானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரியின் பொருளாளர் தாமரை கண்ணன், மற்றும் கல்லூரி முதல்வர்  முனைவர் தர்மலிங்கம்ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரிய திட்ட மேலாளர் முகமது பாரூக், மேற்பார்வையாளர் வைரவன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் பற்றியும், எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கான கட்டுபாடுகள் பற்றியும் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்கள். வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதர மருத்துவமணை ஆலோசகர்கள் முத்துலட்சுமி, அந்தோனி பிரான்ஜிஸ் ஆகியோரது குழுவினர்கள் இரத்தன பற்றி ஆலோசனைகளை வழங்கினார்கள். இம்முகாமில் இரத்த மாதிரிகள் மாணவ மாணவியர்களுக்கு கண்டறிய பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக்குமார், பிரதீப் ஆகியோர் செய்துருந்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள் கல்லூரி மானவர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்


Wednesday, June 19, 2019

SDPI கட்சி ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம்

SDPI கட்சி ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தொகுதி தலைவர் பத்திகாஜா தலைமையில் நடைபெற்றது.
தொகுதி துணை தலைவர் செய்யது பாசில் வரவேற்புரை நிகழ்தினார்.
சிறப்பு அழைப்பார்களாக மாவட்ட தலைவர் S.S.அப்துல் கனி, மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் கலந்து கொண்டனர்.
கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்கம் முன்னிட்டு முப்பெரும் விழா தொடர்பாக விவாதிக்க பட்டது.
ஜூலை 5ம் தேதி பொட்டல்புதூரில் முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நலதிட்ட உதவி வழங்குவது,
கொடியேற்றம் , பொது கூட்டம் நடத்துவது, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நெல்லை முபாரக், மகளிர் அணி மாநில தலைவர் நஜ்மா, மாநில செயலாளர் அகமது நவவி, மாநில பேச்சாளர் ஜாபர் அலி உஸ்மானி, அழைப்பது என தீர்மானிக்க பட்டது.
மேலும் இரவணசமுத்திரத்தில் கொட்டப்படும் குப்பைகளை இடம் மாற்றக்கோரியும், சின்னத்தெரு, கிட்டக்கல் தெரு மற்றும் ரோட்டடி தெரு ஆகிய பகுதி மக்களுக்கு அழுத்தம் குறைவான மின்சாரம் (Low voltage) வினியோகிக்கப்படுவது சம்பந்தமாகவும் மற்றும் முதலியார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட காந்தி நகரில் இதுவரை கழிவுநீர் ஓடை  அமைக்கப்படாததை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதில் முதலியார்பட்டி மேற்கு கிளை தலைவர் ஹாஜா மைதீன், பொட்டல்புதூர் நகர தலைவர் அலாவுத்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியாக தொகுதி பொருளாளர் துரைமுன்னா இபுராஹிம் நன்றியுரை ஆற்றினார்.

Tuesday, June 18, 2019

இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்த தான முகாம்



தேனி அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு வாரியமும், மருத்துவ கல்லூரியும் இணைந்து இரத்ததான தினத்தினை முன்னிட்டு இரத்த தான முகாம்  தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி இரத்த கொடையாளர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதலும் வழங் கினார்.இம்முகாமில் இரத்த வங்கி மேலாளர் S. மணிமொழி, மருத்துவ உதவி அலுவலர் அனுமந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன் , மருத்துவ துணை முதல்வர் எழில் அரசன், பெரியகுளம் மருத்துவமனைஇணை இயக்குனார் சரஸ்வதி, துணை இயக்குனார் வரதராஜான் , ராதா, இரத்த கொடையாளர்கள், செவிலியர்கள்,மருத்துவ கல்லூரி மாணவர்கள்,  கலந்து கொண்டனர். முடிவில் மாவாட்ட புரோகிராம் மேனேஜர் முகமது பாரூக் நன்றியுரையாற்றினார். இம்மு காமில் இரத்த தானதன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், ஏராளமனோர் இரத்த தானம் வழங்கினார்

நெல்லை வன்னாரப்பேட்டையில் தீ விபத்து...


நெல்லை வன்னாரப்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்திலுள்ள குடிசை வீட்டில் அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து. பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் பாளை தீயணைப்பு நிலைய ஊழியர்கள் இணைந்து  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000ரூபாய் நிதியுதவிசெய்தனர்...