Saturday, September 14, 2019

கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி







கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து  பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது

இன்று காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  முதலில் குறும்படம் மூலம் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந் நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை ஆகியவை விரிவாக எடுத்துக்கூறினார்

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நபர்களிடமும் காசநோய் அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டுஅறியபட்டது

சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும் என்று அறுவுத்தபட்டது

காசநோய்
மேலும் முகாமில் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பேசினார்

கூட்டத்தின் முடிவில் காசநோய் உறுதிமொழி ஏற்கப்பட்டது

இம் முகாமில் காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி மற்றும்  சுகாதார பார்வையாளர்கள் திருப்பதி,முருகன், சுரேஸ்குமார் மற்றும் அலுவலர் இளங்கோ, சாத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி நன்றி கூறினார்

No comments:

Post a Comment