நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வரவேற்றார் நிகழ்ச்சியில் நெல்லையின் துணை ஆணையர் ச. சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆசிரியர் தினவிழாவை பற்றி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆசிரியரையே சார்ந்தது எனவும் மாணவர்களிடம் நல்லொழுக்கங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது எனவும் குறிப்பி ட்டார். அதனை தொடர்ந்து தனது பள்ளி பருவ நிகழ்வினையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் பயிற்சிகளில் பயிற்சி ஆசிரியராக விளங்கும் கலை ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு நெல்லை புறநகர் ரோட்டரி சங்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அருங்காட்சியகம் சார்பாக அவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. நெல்லை புறநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜமால் முகமது ஈசா, செயல் பொருளாளர் ஜெய்லானி, சான்ஷா பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கவிஞர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment