Sunday, September 22, 2019

மதுரையில் காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம்




தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் *22.09.2019 மதுரை YMCA கூட்ட அரங்கில்* வைத்து நடைபெற்றது.

நிர்வாகக் குழு கூட்டத்திற்க்கு மாநில தலைவர் *திரு.மாரியப்பன்* அவர்கள் தலைமை தாங்கினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு.அமிர்தலிங்கம்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில பொது செயயலாளர் *திரு.ஆனந்தன்* அவர்கள் கூட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

1. முன்னாள் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்ட நிகழ்வுகளை நடைமுறை படுத்த வேண்டும்.

2. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.

3. 2017 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டிய விசுவாச வெகுமதியை உடனடியாக வழங்க வேண்டும்.

4. விபத்து நிதி மற்றும் இறப்பு நிதி வழங்க வேண்டும்.

5.விழாக்கால போனஸ், விழாக்கால முன் தொகை வழங்கிட வேண்டும்.

6. விபத்து காப்பீடு மற்றும் குடும்ப நல நிதி வழங்க வேண்டும்.

7. பணியில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

8. E.P.F. & E.S.I. திட்டத்தில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்ட வேண்டும்.

9. காசநோய் பணியாளர்களுக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் நிரந்தர  பணியாளர்களுக்கு Risk Allowance & Risk Leave வழங்குவது போல் மற்ற பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் சுகாதாரத்துறையின் கவனத்திற்க்கு கடந்த 4 ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.   அடுத்த 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேராத பட்சத்தில் விரைவில் போராட்ட அறிவிப்புக்கு மாநில தலைமை தயாராக உள்ளது.

இறுதியாக மாநில செய்தி தொடர்பாளர் *திரு.சுரேஷ்* அவர்கள் நன்றியுறை ஆற்றினார்..

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment