Thursday, September 26, 2019

கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் குறைதீர்ப்பு முகாம்



திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகு இனைந்து நடத்திய காசநோய் குறைதீர்ப்பு முகாம் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்சிக்கு பள்ளி சிறார் *மருத்துவர் கோமதி நயினார்* தலைமை வகித்து பேசினார் காசநோயாளிகளிடம் மாத்திரை சாப்பிடும் முறை கேட்டறிந்தார்  மேலும் காசநோய் பரவும் விதம் பற்றி தெளிவாக எடுத்துகூறினார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *கணேசன்* காசநோயாளிகளுக்கு உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்து பற்றி பேசினார்

தொற்றாநோய்கள் குறித்தும் சர்க்கரை நோய் குறித்தும் தொற்றா நோய் செவிலியர் பாலவிஜி பேசினார்.

மேலும் இக் கூட்டத்தில் செவிலியர் வனிதா, சுகாதார ஆய்வாளர் காக்கும் பெருமாள்,பாபு  பகுதி சுகாதார செவிலியர் செல்லதாய்,ஆய்வக நுட்பனர் முருககுமார் ஆற்று படுத்துநர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்





No comments:

Post a Comment