Thursday, August 15, 2019

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள்


         ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் துார்ந்து போன நீராதாரங்களை மீட்டெடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி ஒன்றிய கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
      தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெங்கசமுத்திரம், ராஜகோபாலன் பட்டி, எஸ்.எஸ்.புரம் ,பிச்சம்பட்டி,
கன்னியப்பபிள்ளைபட்டி, ராமகிருஷ்ணாபுரம் , தெப்பம்பட்டி, பாலக்கோம்பை,  மரிக்குண்டு,  மொட்டனூத்து,   என  மொத்தம் 30 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.         பருவமழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுவதால், பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ,மக்களின் பங்களிப்போடு அந்தந்த கிராமங்களில் உள்ள குளம் ,ஊரணி ஆகியவற்றை அரசு விதிகளுக்கு உட்பட்டு தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ரெங்கசமுத்திரம் ஊராட்சி ஜம்புலிபுத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் தண்டபாணி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தூர்ந்து போய் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை மீட்டெடுக்கும் வகையில் சுத்தம் செய்து ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டம், சாக்கடை, கால்வாய்களை சுத்தம் செய்தல், மரங்களை நடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், சேட பட்டி -ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்டுள்ள சத்யாநகர், காலனி, காந்திநகர், பாப்பம்மாள்புரத்திற்கு குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் மார்க்கண்டன்,  சக்கரவர்த்தி, ராஜேஷ்,   விஜயன், பிச்சைமணி , தயாளன், ராஜா, ஜோதிபாசு , வீராச்சாமி ,சுஜிதா உள்பட ஊராட்சி செயலர்கள் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

  

தேனியில்73வது சுதந்திர தின விழா



தேனியில்73வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இளைய தலைமுறையின் சார்பாக தேசியக்கொடி ஏற்றிவைத்து குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன..
நிகழ்வில் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்த  மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் MKM.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கான பேச்சு போட்டி ஓவிய போட்டி, கட்டுறைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், பாராட்டு சான்றிதலும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்அமைதி அறக்கட்டளையின் இயக்குநர் M.அய்யப்பராஜன்,
இளைய தலைமுறையின் இயக்குநர் MK.மருததுரை,மற்றும் தலைமை       ஒருங்கிணைப்பாளர்கள் S.சரவணக்குமார், S.பாண்டி,மற்றும் J.மோனிஸ்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ மணிகள் ஏராளமேனார் கலந்து கொண்டனார்.

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிக்கு பாராட்டு...


பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக சுதந்திரதின விழாவில் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா அவர்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்...

சமூகசேவையில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களையும் சாதனையாளர்களையும் பாராட்டி சான்றிதழ்





இன்று காலை பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் I.A.S  அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர்களையும் தற்போது சமூகசேவையில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களையும் சாதனையாளர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் இதில் தாமிரபரணி ஆற்றின் தூய்மை பணியில் தொடர்ந்து பங்கேற்று அந்த நிகழ்வுகளை வீடியோ&போட்டோஸ் மூலமாக ஆவணப்படுத்தி வருவதை பாராட்டி V.G.P.G கிளப் சிகாமணி,NVPA ஜுப்லி ராஜா கல்லிடைகுறிச்சி பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை சிறப்பாக ஆவணப்படுத்திய வரதராஜன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார்   இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட நமக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஏற்படுத்தி வருகிற சென்னை அண்ணா பல்கலை கழக ஊரக வளர்ச்சி துணை இயக்குனர் திரு.சக்திநாதன் சார் அவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஸ் அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

Wednesday, August 14, 2019

*தூத்துக்குடி காசநோய் துணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கினார்*





தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன்  முன்னிலையில் நடைபெற்றது.

இன்று காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் பின்பு காவல்துறையினர்,தியாகிகளின் வாரிசுகள்,அரசு அலுவலர்கள், விளையாட்டு,கலைத் துறையில் சிறந்து விளங்கிய பலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

காசநோய் துறையில் சிறப்பாக பணியாற்றியமக்காக *துணை இயக்குநர் (காசநோய்) டாக்டர். க.சுந்தரலிங்கம் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,* அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.

துணை இயக்குநர் அவர்களை காசநோய் துறையின் சார்பாக அனைத்து பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

*வல்லநாடு சித்த மருத்துவ அலுவலருக்கு சிறந்த மருத்துவருக்கான விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்*



தூத்துக்குடி மாவட்டத்தில் 73 வது சுதந்திர தின கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.

சித்த மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியமக்காக வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். சி.செல்வகுமார், M.D., அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.

சான்றிதழ் பெற்ற சித்த மருத்துவர் அவர்களை மருத்துவ துறை சார்பாக அனைத்து பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

மழலையர் கொண்டாடிய சுதந்திர தின விழா...

இந்திய திருநாட்டின் 73 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நெல்லை என்.ஜி.ஓ பி காலனி லிட்டில் ஏஞ்சல் பிளே ஸ்கூல் மழலையர் தேசியகொடியுடன் ஊர்வலம்...