Thursday, August 8, 2019
தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடியில் தேசிய குடற்புலு நீக்க முகாம்
தேசிய குடற் புலு நீக்க நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்றுப் புலுவை நீக்கும் *அல்பண்டசோல்* மாத்திரை மொத்தம் 506806 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களின் ஆலோசனையின்படி வழங்கப்பட்டது.
இம்மாத்திரை வழங்கும் முகாம் இன்று 8.8.19 கீழசெக்காரகுடி அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.கீதா ராணி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கிளாரா அமுத ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் 733 பேருக்கு குடற்புலு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
இம்முகாமில் திட்ட மேலாளர் டாக்டர்.கன்னியம்மள், செக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பன்னீர் செல்வம், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் திரு.வடிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.பெரியசாமி, சுகாதார ஆய்வாளர் திரு.முத்துகுமார், கிராம சுகாதார செவிலியர் திருமதி.நிர்மலா தேவி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tuesday, August 6, 2019
தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்றது.
தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்றது. விழாவில் கிருஷ்ணா ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா நடன இசைப்பள்ளி நிர்வாகியும் பாட்டு ஆசிரியராகுமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம் பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சாஸ்திர முறைப்படி பரத நாட்டியத்தை துவக்கிவைத்தனர் .ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா நடன இசைப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி குழந்தைகளுக்கு இக்கலையினை கற்று கொடுத்து வருகின்றனர் . மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இலவசமாகவும் கற்று கொடுக்கின்றனர் . இப்பரத நாட்டிய பள்ளியில் பயின்ற 36 மாணவிகள் சிதம்பரத்தில் நடைபெற்ற கின்னஸ் சாதனையாளர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள்ஏராள மனோர் கலந்து கொண்டனார்
தென்காசியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
வளர்ந்த நகரின் ஒன்றான தென்காசியில் தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனை நிரந்தரமாக தீர்வு எடுக்க வேண்டும் என எண்ணிய காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளர் ஐயா,ஆடிவேல் , உதவி ஆய்வாளர் மேரி ஞான ரூபி நகரில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், வணிகர்கள் , தனியார் வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி சில தீர்மானங்களை அனைவரின் சம்மதத்துடன் நிறைவேற்றினார்.
வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
கடைகளின் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக பொருட்கள் வைக்க கூடாது.
இரு சக்கர வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும்
கடையின் விளம்பர போர்டுகள் போக்குவரத்திற்கு இடையூராக வைக்க கூடாது.
சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகருக்குள் வர வேண்டும்.
வாகன ஓட்டிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு வழிப் பாதையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
விதிகளை மீறும் வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொது மக்களும் வணிகர்களும் முழு ஆதரவு தருவாத உறுதியளித்தனர்.
Saturday, August 3, 2019
நெல்லை அரசு அருங்காட்சியகமும் எப்சிபா அறக்கட்டளை சென்னையும் இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பண்பாட்டு செல்வங்கள் பாதுகாப்பு ஓர் அறிமுகம் என்கிற தலை
நெல்லை அரசு அருங்காட்சியகமும் எப்சிபா அறக்கட்டளை சென்னையும் இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பண்பாட்டு செல்வங்கள் பாதுகாப்பு ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் என்று நடத்தினர் அரங்கத்தில் காப்பாற்றிய சிவ சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார் ஹெப்சிபா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் முனைவர் வே ஜெயராஜ் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்களை பாதுகாப்பது தொடர்பான செய்முறை வகுப்பினை நடத்தினார் அப்பயிற்சியில் அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் , மர சிற்பங்கள், உலோகப் பொருள்கள், ஓலைச்சுவடிகள் , தோல் பொம்மைகள் ஆகியவற்றை வேதியல் முறைப்படி பாதுகாக்கும் பயிற்சி வகுப்பினை நடத்தினார் .அவரைத் தொடர்ந்து போட்டோ சைலம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் ரங்கநாதன் அவர்கள் ஆவணங்கள் பாதுகாப்பு தொடர்பான செய்முறை வகுப்பினை நடத்தி காட்டினார். இப்பயிற்சியில் நெல்லை சேவியர் கல்லூரியில் வேதியியல் பிரிவு மாணவ மாணவிகளும் , தூத்துக்குடி புனித மேரி கல்லூரி வரலாற்றுத் துறை மாணவிகளும், சாத்தூர் srnm கல்லூரி மாணவர்களும் மொத்தம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.
Subscribe to:
Posts (Atom)













































